"தெய்வமே..." போயஸ் கார்டனில் முழக்கம்.. வெள்ளை ஆடையில் தோன்றி புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்
தன்னை சந்திக்க வந்த ரசிகர்களைப் பார்த்து புத்தாண்டு வாழ்த்து கூறினார் ரஜினிகாந்த். அப்போது ஏராளமான ரசிகர்கள் தெய்வமே என்று முழக்கமிட்டனர்.
சென்னை: தன்னை காண வந்த ரசிகர்களை தனது வீட்டு வாசலில் சந்தித்த ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ரஜினியின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஏராளமானோர் தெய்வமே என்று உற்சாக முழக்கமிட்டனர். சில நிமிட நேரம்தான் என்றாலும் மின்னல் போல வந்து புத்தாண்டு நாளில் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார்.
அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் போயஸ்கார்டன் வீட்டு வாசலில் காத்திருந்தனர். தன்னை காண வந்த ரசிகர்களைப் பார்ப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வந்து உற்சாகமாக கையசைத்தார்.

தெய்வமே தெய்வமே
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்திருந்த மின்னல் போல வந்த ரஜினிகாந்தை பார்த்த உடன் ரசிகர்கள் தலைவா என்று முழக்கமிட்டனர். சிலரோ தெய்வமே தெய்வமே என்று அழைத்தனர்.

வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் அங்கிருந்த ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவா என்றும் உற்சாக முழக்கமிட்டனர். அப்போது அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினார்.

தவமிருக்கும் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தாலும் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவ்வப்போது போயஸ்கார்டன் சென்று ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர். தன்னை காண வரும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் சில நிமிடங்கள் பேசுகிறார் ரஜினிகாந்த்.

பிரார்த்தனை
டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தநாளன்று ஏராளமான ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டியும் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

சில நிமிட தரிசனம்
ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் கடவுளாக பாவித்து வருகின்றனர். புத்தாண்டு தினமான இன்று போயஸ்கார்டன் வாசலில் காத்திருந்தவர்களுக்கு இன்றைய தினம் சில நிமிட தரிசனமே கிடைத்தாலும் தெய்வமே என்று உற்சாகத்தோடு குரல் எழுப்பி கும்பிட்டனர் ரசிகர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications