ஊட்டி வளர்த்தது இதுக்குத் தானா?.. இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. சீமானை 'அதிர' வைத்த ட்வீட்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் ராஜீவ் காந்தியின் லேட்டஸ்ட் ட்வீட், தம்பிகளை கொதிக்க வைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி. இவரை நாம் தமிழர் தம்பிகள் பாசத்தோடு 'ஆருயிர் அண்ணன்' , 'அன்பு அண்ணன்' என்று அழைத்தனர்.
1.. 2.. 3.. ஜூட்.. நேரடியாக மோதும் திமுக அதிமுக.. ஷாக்கா இருக்கே.. இதெல்லாம் திட்டம் போட்டு நடந்ததா?
ஆனால், சில பல காரணங்களுக்காக இவர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் ஐக்கியமானார்.

மாஸ் காட்டிய நாம் தமிழர்
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட டாப் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியியும் அதிரடியாக 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என்று திறந்த வெளி அரங்கில் வேட்பாளர்களை அறிவித்து மாஸ் காட்டியது.

திமுக மீது குற்றச்சாட்டு
இருக்கின்றன கட்சிகளிலேயே அதிகம் பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பது நாம் தமிழர் தான். இந்த நிலையில், முக்கிய கட்சிகளில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. திமுகவும் இதே குற்றச்சாட்டை சந்தித்து வருகிறது. அங்கு டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் என்று பல வாரிசுகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியினரின் சொந்தங்கள்
இந்த சூழலில், ராஜீவ் காந்தி, இன்று பதிவிட்டுள்ள டீவீட்டில், "எனக்கு தெரிந்து அதிகமாக வாரிசுகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ள கட்சி நாம்தமிழர் தான்.பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்களின் அக்கா, தங்கை, மனைவி என தேர்தலுக்குக்காக புதிதாக சேர்க்கபட்டவர்களே! கடந்த தேர்தலில் போட்டியிட்ட பல பெண்கள் இதனால்தான் இப்போது கட்சியில் இல்லை!" என்று போட்டு உடைத்திருக்கிறார்.

கோபத்தில் சீமான்
திமுகவிற்கு வந்த போது கூட, 'சீமான் என் அண்ணன். பாஜகவை எதிர்க்க திமுக வந்தேன்' என்று கூறியவர், இன்று ஸ்ட்ரெய்ட்டாக நாம் தமிழர் வேட்பாளர்கள் லிஸ்ட்டில் கை வைத்துள்ளார். திமுகவை விட, நாம் தமிழர் கட்சியில் தான் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தவே அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் உடனே சீமானுக்கும் தெரிவிக்கப்பட, கடும் கோபத்தில் இருக்கிறாராம்.