கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.. 9 பேர் விடுதலை உறுதி!
சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கோபிசெட்டிப்பாளையம் அமர்வு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை ஐகோர்ட்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி, தமிழக - கர்நாடக அரசுகள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு குழுக்களை காட்டுக்குள் அனுப்பின. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 108 நாள்கள், பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் கடத்தல் வழக்கில் வீரப்பன் உட்பட அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, ரமேஷ், கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வன், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகியோர் மீது ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோபிச்செட்டிபாளையம் 3வது அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரகவுடா ஆகிய மூவரும் சிறப்பு காவல்படையால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையின்போது இந்த வழக்கில் தொடர்புடைய மல்லு இறந்துவிட, ரமேஷ் தலைமறைவானார். மீதமுள்ள 9 பேர் 18 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொண்டு வந்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகளான கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி, கல்மண்டிராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், வீரப்பனுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பு இருந்தது என்பதை நிரூபிக்க காவல்துறை போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவருடைய மனைவி பர்வதம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தவில்லை. தூதுவர்களாகக் காட்டுக்குள் சென்றவர்களிடம் காவல்துறை விசாரிக்கவில்லை. எனவே தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்" என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் அமர்வு முன்பு நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், குற்றச்சாட்டை நிரூபிக்க காவல்துறை போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, அனைவரையும் விடுதலை செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications