ராம பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம்.. ஸ்ரீராம ஜெயம் சொன்னால் என்னென்ன நன்மைகள்
சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினம் பக்தர்கள் 'ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்' என்ற ராம மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார். அனுமன் உபயோகித்த 'ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையில் எண்ணற்ற வெற்றிகள் கிடைக்கும்.
உலகிலேயே மிக எளிய மந்திரமும், சக்தி வாய்ந்த மந்திரமாகா 'ராமா' என்ற மந்திரம் விளங்குகிறது. ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் அனுமன் வருவார் என்று நம்பப்படுகிறது. நான் என்ற அகங்காரத்தை நம் மனதிலிருந்து நீக்கி, அன்பை நிரப்புவது தான் ராமா என்ற நாமத்தின் அற்புதம்.

அனுமன் 'ராம' என்ற நாமத்தை 33 கோடி முறை ஜெபித்துள்ளதாகவும், அதுவும் எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் நாமத்தை உச்சரித்ததால், இன்றும் நம்முடன் சிரஞ்சீவியாக இருக்கிறார்.
இலங்கையில் ராமனுக்குக்கும், ராவணனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அப்போது அசோக வனத்தில் இருந்த சீதா தேவியின் மனதிலும் ராம பிரான் போரில் வெற்றி பெற்று விட்டாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள காத்திருந்தார். தன் கணவர் வெற்றி வாகை சூடிவிட்டார் என்ற தகவல் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
சீதா தேவியின் முன் வந்து நின்ற அனுமன், ஸ்ரீ ராமன் வெற்றி பெற்றார் என்பதை விளக்கி சீதையின் மனக்கவலையை துடைக்க நேரம் ஆகும் என்பதை அறிந்து, ஒரே வார்த்தையில், ஸ்ரீ ராம ஜெயம் என்று கூறி ராமர் வெற்றி பெற்றார் என்று கூறினார். அனுமன் கூறிய ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையே மந்திரமானது.
மனம் சஞ்சலத்துடன் இருக்கும் போது மிக எளிய ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதாலும், ஒரு காகிகத்தில் எழுதுவதால் நம் மனம் நிம்மதி அடையும். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜெயம் சேர்க்கப்பட்டு ஸ்ரீ ராம ஜெயம் என உச்சரிக்கப்படுகிறது.
'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரம் ஒருவனுக்கு வெற்றியை மட்டும் தராமல், அவரின் வாழ்வில் தடங்கல் செய்யக்கூடிய எதிரிகளை அவர்களின் வாழ்விலிருந்து நிக்கி நாம் எதிர்பார்த்த வெற்றியை தரக்கூடியதால், நாம் அனுதினமும் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை எப்போதும் மூச்சுக் காற்றைப் போல உச்சரித்துக் கொண்டே இருங்கள். ஸ்ரீராம ஜெயம் எனப்படும் ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
ஸ்ரீ ராம ஜெயம் இன்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் ஹனுமான் ராம நாமாவை சிந்தித்தால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினம் நாம் ராம நாமம் சொல்ல வேண்டும்.
செல்லம் பெருக, கடன் தீர, உத்யோகம், தொழில், வியாபாரம், பணபிரச்சனை, திருமணம், குழந்தை பாக்கியம்,நோய் விலக, ஆரோக்யம்,மன நிம்மதி,குடும்ப ஒற்றுமை,கண் த்ருஷ்டி நீங்க,தம்பதி அன்யோன்யம்,சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, செய்வினை கோளாறுகள் நீங்க அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகும்..












Click it and Unblock the Notifications