சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர்கள் உள்இடஒதுக்கீடு கோருவது ஏன்? பல்வேறு கேள்விகளுக்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து ஊடகவியலாளர்களின் பல்வேறு சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

அப்போது செய்தியாளர் ஒருவர், வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கோரியிருந்தீர்கள் இப்போது திடீரென கேட்க வேண்டிய காரணம் என்ன என்றார். அதற்கு பதில் அளித்த ராமதாஸ் திடீரென கேட்கவில்லை பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம் என்று விளக்கம் அளித்தார். அன்பு மணி ராமதாஸ் கூறும் போது கடந்த 3 வருடங்களாக முதல்வரை சந்தித்து பலமுறை இதுசம்பந்தமாக கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்,

இன்னொரு பிரபல ஊடகத்தின் செய்தியாளர், ஒருவர் 40 வருட போராட்டமாக போராட்டம் நடத்தி உள்ளீர்கள். எல்லா சாதிக்கும் இடஒதுக்கீடு கிடைத்தால் தானே அது சரியான நுதி அதற்கு சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லவா, அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு

அதற்கு ராமதாஸ். நாட்டில் இதற்கு முன்பு எங்குமே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி ரிசர்வேசன் கொடுக்கப்படவில்லை. வெள்ளைக்கார்கள் எடுத்த ஜாதி கணக்கெடுப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தான் ரிசர்வேசன் கொடுத்தார்கள். ஆந்திரா, தெலுங்கானா உள்பட பிறமாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தான் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திதான் இடஒதுக்கீடு தருமாறு நாங்களும் கேட்கிறோம் அனைத்து சாதிக்குமே தர வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் உடனே அது சாத்தியம் இல்லை. பட்டினியில் உள்ளவர்களுக்கு உடனே கிடைக்காது. அதற்கு நிறைய காலங்கள் ஆகும்.

ஜாதி வாரியாக கணக்கெடுபபு

ஜாதி வாரியாக கணக்கெடுபபு

இன்னொரு செய்தியாளர் ஸ்டாலின் உள்ஒதுக்கீடு குறித்து சொன்ன போது சாத்தியமில்லை என்று சொன்னீர்கள் இப்போது சாத்தியம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், 1980களிலேயே 20 சதவீத ஒதுக்கீடு, ஜாதி வாரியாக கணக்கெடுபபு உள்பட நான்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் நடக்கவில்லை. இதனால் நாங்கள் மனசுமாறி,. இறங்கி வந்து வன்னியர் சமூகத்திற்கென உள்ஒதுக்கீடுகேட்டுள்ளோம் என்றார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுபற்றி கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் விக்ரவாண்டி இடைத்தேர்தல் முன்பும் இடஒதுக்கீடு குறித்து பேசவில்லை. அதன்பிறகும் பேசவில்லை. இதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை. எங்கள் நோக்கம் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் என்றார்.

எத்தனை சதவீதம்

எத்தனை சதவீதம்

அதிமுக தலைமையிலான தமிழக அரசிடம் எத்தனை சதவீதம் உள்ஒதுக்கீடு கேட்டிருக்கிறீர்கள். வன்னியர்கள் வறுமையில் வாழ்வதாக கூறியுள்ளீர்கள். வன்னியர்களுக்கு மட்டும் உள்ஒதுக்கீடு கேட்க வேண்டிய அவசியம் என்ன? இடஒதுக்கீட்டால் மற்ற சமுதாயத்தினர் பொருளாதார நிலை உயர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அரசு வேலைகளில் புறக்கணிப்பு

அரசு வேலைகளில் புறக்கணிப்பு

அதற்கு ராமதாஸ் இடஒதுக்கீடு அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உதாரணமாக போலீசுக்கு ஆள்.. எடுக்கும் போது வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரை இன்ச் குறைவாக இருந்தால் மற்ற சாதியினர் ஏற்கப்படுகிறார்கள்,. அரை இன்ச் அதிகமாக இருந்தாலும் ஏற்கப்படுவதில்லை. போலீஸ் வேலை என்று இல்லை. அனைத்து அரசு பணியிலும் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். உள்ஒதுக்கீடு இருந்தால் நியாயமாக இருக்கும், வன்னியர்கள் இருந்தால் அங்கு நியாயம் கிடைக்கும் என்றார்.

English summary
Ramadoss, Anbumani Ramadoss answer various questions on Vanniyar community reservation at zoom meeting with media peoples at chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X