சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டிற்கு பதில் தமிழ்நாய்டு.. மத்திய அரசு இணையதளத்தில் எழுத்து பிழை.. பாமக ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ்நாய்டு என மத்திய அரசு இணையதளத்தில் எழுத்து பிழைக்கு பாமக ராமதாஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ்நாயுடு என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74ஆவது குடியரசு தினம் கடந்த 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் கலந்து கொண்டார்.

இந்த குடியரசு தினவிழாவில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 வடமாநிலத்தவர் தமிழர்களை தாக்கியதாக பரவும் வீடியோ! இறங்கும் தனிப்படை!கூடவே சைபர் கிரைம்! பரபர ஆக்ஷன் வடமாநிலத்தவர் தமிழர்களை தாக்கியதாக பரவும் வீடியோ! இறங்கும் தனிப்படை!கூடவே சைபர் கிரைம்! பரபர ஆக்ஷன்

ஆங்கிலத்தில் இடம் பெற்ற 17 மாநிலங்கள்

ஆங்கிலத்தில் இடம் பெற்ற 17 மாநிலங்கள்

மத்திய அரசின் இணைய பக்கத்தில் 17 மாநிலங்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாய்டு (Tamil Naidu) என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் கண்டனம்

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பிழை

பிழை

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

தமிழ்நாடு பெயர் சர்ச்சை

தமிழ்நாடு பெயர் சர்ச்சை

தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

இணையதளத்தில் நடந்த பிழை

இணையதளத்தில் நடந்த பிழை

www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பெயர் சர்ச்சை

தமிழ்நாடு பெயர் சர்ச்சை

அண்மையில் ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்கலாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா வைத்த தமிழ்நாடு என்ற பெயரை எப்படி தமிழகம் என மாற்றலாம் என ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. மேலும் இந்த தமிழ்நாடு விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதன் பின்னர் தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
PMK Founder Ramadoss condemns Tamil nadu name wrongly posted in Central government website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X