சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்ல போட்டி போட கூட ஆள் இல்லை.. வேட்பாளரே கிடைப்பதில்லை.. ராமதாஸ் ஆதங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆளே கிடைக்கவில்லை. வேட்பாளர் கிடைக்க மாட்டேங்கிறார்கள், இருக்குறவனுங்களும் உள்ளூர் புரிதலால் காசு வாங்கிகிட்டு எஸ்கேப் ஆகிடுறாங்க என பாமக ராமதாஸ் கவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக ஒரு இடங்களிலும் வெல்லவில்லை. ஆனால் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைத்து பாமக 5 இடங்களில் வென்றது. அவையெல்லாம் வடதமிழகம் என்று சொல்லப்படுகிறது.

என்ன செய்வீங்களோ.. எனக்கு தெரியாது.. 2026 இல் அன்புமணி தமிழக முதல்வராகணும்.. ராமதாஸ் கட்டளை என்ன செய்வீங்களோ.. எனக்கு தெரியாது.. 2026 இல் அன்புமணி தமிழக முதல்வராகணும்.. ராமதாஸ் கட்டளை

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அறிவித்ததால் அதிமுகவும் பாமகவும் அதிக இடங்களில் வென்றதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றியை கூட பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பெறவில்லை என விமர்சிக்கப்படுகிறது.

திண்டிவனம்

திண்டிவனம்

இந்த நிலையில் திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

வேட்பாளர்களை நிறுத்த

வேட்பாளர்களை நிறுத்த

அவர் பேசுகையில் கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கிய காரணம் local understanding, அதாவது உள்ளூர் புரிதல்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் இல்லை. யாராவது வந்தாலும் எதிர்க்கட்சிக்காரர்கிட்ட காச வாங்கிட்டு போட்டியிடாம போய்டுறாங்க.

சறுக்கல்

சறுக்கல்

அவ்வளவு பலவீனமான கட்சியாக நாம் மாறிவிட்டோமா? நம்முடைய பகுதியை மட்டும் நான் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலைதான். ஏன் இந்த சறுக்கல், பாமக தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது, பாமவின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என இருப்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

கட்சிக்கு சொந்தமில்லை

கட்சிக்கு சொந்தமில்லை

வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும். எந்த கட்சிக்கும் சொந்தமில்லை, பந்தமில்லை. ஆனால் பாமகவுக்கு சொந்த பந்தம் உண்டு. நீங்கள் அனைவரும் அன்புமணியின் தம்பி, தங்கைகள் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். வருங்காலம் நமதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது.

வேலூர்

வேலூர்

அப்போது செங்கல்பட்டு, வேலூரில் மட்டும் உள்ளூர் அளவில் கூட்டணி வைத்து ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என சொல்லப்பட்டது. இதைத்தான் தனது ட்வீட்டில் லோக்கல் அன்டர்ஸ்டான்டிங் இல்லை, புரிஞ்சுதா understand? என கேட்டு மொதக்தமாக கூட்டணி முறிவை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்தான் அவர் லோக்கல் அன்டர்ஸ்டான்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

English summary
PMK Founder Ramadoss feels very sad about no one in the party to compete even in local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X