அன்புமணியை பார்த்தாலே என் BP எகிறுது! தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் இல்லை! ராமதாஸ் வேதனை
திண்டிவனம்: அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த கொதிப்பு உயர்கிறது என பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் விமர்சித்திருந்தார். அத்துடன் தனது மூச்சு இருக்கும் வரை அன்புமணி, பாமகவின் தலைவராகவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவர் கூறியிருந்ததாவது: நேற்று 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு, தலைவர் பதவி கொடுக்கிறேன் என சொன்னேன்.
ஆனால் மைக்கை வீசி அடிப்பது, தாய் மீது பாட்டிலால் அடிப்பது உள்ளிட்ட அன்புமணியின் செயல்பாடுகளை ப பார்க்கும் போது எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன்.
குடும்பத்தினர்
எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வரக் கூடாது என்று கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.
35 வயதில் மத்திய அமைச்சர்
கட்சி நிர்வாகிகள் சொன்னதால் 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் அன்புமணி விருது வாங்கினார். தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும். அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.
96 ஆயிரம் கிராமங்கள்
தனி ஒரு நபராக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு, பகலாக சென்று நான் பட்ட பாடு சொல்லி மாளாது. "100 ஆண்டுகள் இருப்பீங்க" என சொல்லிவிட்டு மார்பிலும் முதுகிலும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திவிட்டு இருக்கிறார். இதனால் தூக்க மாத்திரை போட்டாலும் எனக்கு தூக்கம் வருவதில்லை.
அன்புமணியை நினைத்தால் வலி
அன்புமணியை நினைக்கும் போது வலி ஏற்படுகிறது. ஆனால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல, பாசமெல்லாம் எனக்கு போய்விட்டது. அவருக்கு ஒரே தீர்வு, செயல் தலைவராகவே இருக்கிறேன். ஐயா சொல்வதை கேட்கிறேன் என கூறுவதுதான் . இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்- அன்புமணி
பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே தலைவர் பதவி யாருக்கு என்பதில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் பிரிந்திருக்கிறார்கள். அதாவது அன்புமணியுடனும் ராமதாஸுடனும் இருக்கிறார்கள்.
தலைவர் பதவி
தலைவர் பதவி தன்னிடம் இருப்பதால், அன்புமணிக்கு வேண்டப்பட்டவர்களை ராமதாஸ் நீக்குவதும், "நான்தான் தலைவர், நான் பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டவன்" என கூறி, அன்புமணி அவர்களை மீண்டும் நியமிப்பதும் என்பதாகவே இருந்தது.
திலகபாமா
திலகபாமா, பாலு உள்ளிட்டோரின் பதவிகளை ராமதாஸ் பறித்தார். உடனே அதே பதவியில் அவர்கள் நீடிப்பார்கள் என அன்புமணி நீடித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்து அன்புமணி தோல்வி அடைந்துவிட்டார்.
பாமக முன்னேற்றம்
வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலாவது பாமக நல்லதொரு முன்னேற்றத்தை பெற வேண்டும் என ராமதாஸ் விரும்புகிறார். அதன் கட்சியை தனது கைக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார். அப்பா- மகனிடையே உள்ள சண்டையால் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்வது , யாருடைய ஆலோசனை கூட்டத்திற்கு போவது, பனையூரா, தைலாபுரமா என்றெல்லாம் குழம்பிக் கொள்கிறார்கள். அன்புமணி- ராமதாஸ் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் அவை டிராவில் முடிந்ததாக ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications