இது லிஸ்ட்லேயே இல்லையே.. வீட்டு மனைப்பிரிவு பதிய வேணுமா? வந்தது புது நடைமுறை.. ரியல் எஸ்டேட் மாஸ்
சென்னை: வீட்டு மனைப்பதிவுகள் குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. என்ன அது?
வீட்டுமனை திட்டங்களில் உருவாகும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், இதற்கென பிரத்யேக விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

இதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது.
புகார்கள்: கடந்த 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
அதேபோல, வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். எனவே, "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது என்பது அடிப்படை விதியாகும்.
விண்ணப்பங்கள்: இப்படிப்பட்ட சூழலில், முக்கிய உத்தரவு ஒன்றினை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கிறது.. குடியிருப்பு மற்றும் வழக்கமான பிரிவின் கீழ் வரும் மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, மார்ச் 1 முதல், ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அந்த உத்தரவில், "தமிழகத்தில் வீடு, மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்குவோர், அதற்கான ஒப்புதல் பெற்ற பிறகு, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும், இதுவரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
புதிய நடைமுறை: தற்போது, அனைத்து வகை விண்ணப்பங்களையும், ஆன்லைன் முறையில் மட்டுமே பெறுவது என ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 1 முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றன" என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications