சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் சேதுராமன் முதல் கவுசிக் வரை.. இளைஞர்கள் மாரடைப்பால் இறப்பது ஏன்? தடுப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: 32 வயதான சினிமா செய்தியாளர் கௌசிக் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளும் சேர்ந்தே எழத் தொடங்கி இருக்கின்றன.

இதுகுறித்து இதய நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம். மாரடைப்பு மற்றும் பிற இருதய நோய்கள் உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. எத்தனை மருத்துவ முறைகள் வந்தாலும் இதய பிரச்சனைகள் குறைந்தபாடில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இளைய தலைமுறையினரிடையே இதய பிரச்சினைகள் அதிகரித்து வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதய நோய் பிரச்சனை நீண்ட காலமாக மனித சமுதாயத்தில் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

3 நாள் லீவு முடிஞ்சி போச்சு.. சொந்த ஊரில் இருந்து படையெடுக்கும் மக்கள்.. சென்னையில் செம டிராபிக் 3 நாள் லீவு முடிஞ்சி போச்சு.. சொந்த ஊரில் இருந்து படையெடுக்கும் மக்கள்.. சென்னையில் செம டிராபிக்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் முன்பே இதய பரிசோதனை செய்து கொள்வதில்லை. இதய பரிசோதனை இல்லாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள், பின்னர் ஜிம்மில் எடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். டிரெட்மில், கிராஸ் வொர்கவுட் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது இதயத்தின் தடிமனை அதிகரிக்க வைக்கிறது.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

சிலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்கிறார்கள். அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி, அரித்மியாவுக்கு வழிவகுக்கும். ஒரு நபர் தனது 20 வயதுகளில் இருக்கும்போது, ​​​​கொலஸ்ட்ரால் அல்லது வேறு சில காரணங்களால் உணவை உட்கொள்வதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த தொடங்கி டயட்டில் ஈடுபடுகிறார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இருப்பினும், ஒரு நபர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, ​​இதயம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். ஏற்கனவே இதயத்தில் இருக்கும் அடைப்புகளுக்கு அருகில் கட்டிகள் ஏற்படும். இது இரத்த உறைவு மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். இதய நோய்கள் பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் தொடர்புடையது.

மரபணு நோய்

மரபணு நோய்

நீண்ட கால மன அழுத்தத்திலிருந்து அதிக கார்டிசோல் அளவுகள் ஒரு நபரை உயர் இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு நோய்கள் மரபணு ரீதியாகவே ஏற்படுகின்றன. இதய நோய்க்கு இதுவும் காரணம். ஆனால், அதற்கான காரணங்களை அறிந்து தவிர்க்கலாம்.

Recommended Video

    இவ்ளோதாங்க வாழ்க்கை, Kaushik வைத்திருந்த உருக்கமான Whatsapp Status *Celebrity
    மது, சிகரெட்

    மது, சிகரெட்

    இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், இதயநோய் நிபுணர் அல்லது இதய மின் இயற்பியல் நிபுணரைச் சந்திக்க வேண்டும். மேலும், சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்கள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தி, கொழுப்புச் சத்துகளைக் கண்காணிக்க வேண்டும். மிக முக்கியமாக புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    English summary
    Reasons for heart attack to younsters - How to avoid heart attack: 32 வயதான சினிமா செய்தியாளர் கௌசிக் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளும் சேர்ந்தே எழத் தொடங்கி இருக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X