விடாமல் கொட்டும் மழை.பரிதவிக்கும் தலைநகர்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை: கடந்த மாதம் சென்னையில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களளும் வெள்ளகாடாக காட்சியளித்தது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியது.
Recommended Video
இதனால் மழையை கண்டாலே சென்னை மக்கள் அச்சம் கொள்ளும் நிலையில் சென்னையில் இன்று 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.

மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
இதனால் சென்னையின் பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான சாலையான அண்ணாசாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுகிறது. பல்வேறு சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டடு ஓடுகிறது.

எதிர்பார்த்ததை விட அதிக மழை
பலத்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1 கிலோ மீட்டரைக்கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து இல்லம் திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர். இப்படியான திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையமே எதிர்பார்க்கவில்லை. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துளளார்.

எம்.ஆர்.சி. நகரில் 18 செ.மீ மழை
தமிழக கடற்கரையோரம் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருவதாகவும்,
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகந்ததால் அதிக மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் மட்டும் 18 செ.மீ மழை கொட்டியுள்ளது

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்(அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications