சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும்

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சூறாவளிக்காற்றும் வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவாட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஆரம்பம் அடைமழை! சென்னைக்கு Red Alert எச்சரிக்கை! | Oneindia Tamil

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

    இதனிடையே இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் அறிவித்துள்ளது.

     நடுவானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி.. சட்டென உதவிய மத்திய இணை அமைச்சர்.. நெகிழ்சசி சம்பவம் நடுவானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி.. சட்டென உதவிய மத்திய இணை அமைச்சர்.. நெகிழ்சசி சம்பவம்

    மிக கனமழைக்கு வாய்ப்பு

    மிக கனமழைக்கு வாய்ப்பு

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ம் தேதி, தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம், ராமநாதபுரம்,தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, மதுரை,சிவகங்கை,விருதுநகர், புதுக்கோட்டை தென்காசி ,தேனி,திண்டுக்கல், கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் ,திருவண்ணாமலை, சேலம் ,டெல்டா ,மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    4 மாவட்டங்களில் அதிகனமழை

    4 மாவட்டங்களில் அதிகனமழை

    நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இதனால் தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இடி மின்னலுடன் கனமழை

    இடி மின்னலுடன் கனமழை

    அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    மேற்கு மாவட்டங்களில் கனமழை

    மேற்கு மாவட்டங்களில் கனமழை

    நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். அத்துடன் சேலம், தர்மபுரி ,ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    மிதமான மழை

    மிதமான மழை

    வருகிற 20ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ,வேலூர்,கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 21ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அதிகனமழை

    சென்னையில் அதிகனமழை

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும்.

    சூறாவளி வீசும்

    சூறாவளி வீசும்

    இன்றும் நாளையும் மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Red alert in 4 districts including Chennai ... Heavy rain in 8 districts says IMD Due to the low pressure area in the Bay of Bengal 8 districts including Chennai will receive heavy rains today. Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore, Villupuram, Ramanathapuram and Thoothukudi districts will receive heavy rainfall, the Met office said. A red alert has been issued for 4 districts including Chennai tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X