பத்திரம் கிரையம் பண்றீங்களா? தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு டோக்கன் தேவை! பதிவுத்துறைக்கு போன பெயிரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள, இந்த 4 ஆண்டுகளில் இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியிருக்கிறது. தமிழக வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சாதனை படைத்திருப்பதாக சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி சட்டசபையிலும் பெருமிதமாக கூறியிருந்தார்.. இந்நிலையில், முகூர்த்த நாட்களை முன்னிட்டு, தமிழக பதிவுத்துறைக்கு பெயிரா முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. முக்கியமாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அதனால்தான், முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Registration Department Property Deed Land

வழக்கமாக சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன..

மங்களகரமான தினங்கள்

அப்படித்தான், வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான கடந்த 5ம் தேதி, மறுநாள் 6ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.. இதுபோன்று கூடுதல் டோக்கனைகளை ஒதுக்கீடு செய்வதால், இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறுகிறது.

சுபமுகூர்த்த நாட்களில் பெரும்பாலான பொதுமக்கள், தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் அடைவதால், அன்றைய தினம் அதிக டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என சொல்லப்படும் பெயிராவும் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளது..


மீண்டும் கோரிக்கை வைத்த பெயிரா

இந்நிலையில், பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.. எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி, அக்கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, அக்கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.06.2025 சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.


டோக்கன்கள் பற்றாக்குறை

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் (குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில்) ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன் பதிவு செய்ய இயலாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றார்கள். ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.06.2025 சுபமுகூர்த்த தினமான அன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.


கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர்,

இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுப முகூர்த்த தினத்தில் தேவையான அளவிற்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்களைக் கணிசமாக உயர்த்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்றே தெரிகிறது. அப்படி ஒதுக்கீடு செய்தால், அதற்கான அறிவிப்பும் இன்றைய தினம் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+