சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்தா? உண்மையும் கட்டுக்கதையும்!

Google Oneindia Tamil News

சென்னை: ரெம்டெசிவர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என்றும், அதனை பொதுமக்கள் வெளியில் தேடி அலைய வேண்டாம் என்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    New Corona Virus Symptoms | Corona Vaccine | Doctor Boopathy John விளக்கம் | Oneindia Tamil

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரெம்டெசிவர் மருந்து டாக்டர்களால் அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறது.

    பயணங்கள் முடிவதில்லை; நினைவுகள் மறப்பதில்லை; MLA ஹாஸ்டலில் இருந்து விடைபெற்ற தமிமுன் அன்சாரி..! பயணங்கள் முடிவதில்லை; நினைவுகள் மறப்பதில்லை; MLA ஹாஸ்டலில் இருந்து விடைபெற்ற தமிமுன் அன்சாரி..!

    தமிழகத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டு வினியோகம் செய்வதால் பொதுமக்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது.

    அலைய வேண்டாம்

    அலைய வேண்டாம்

    இந்நிலையில் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அனைவரும் ரெம்டெசிவர் மருந்தை தேடி அலைகின்றனர். இதுகுறித்து என் கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்து இல்லை. உலக சுகாதார நிறுவனமும் தமிழக சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

    தேவையற்ற மாயை

    தேவையற்ற மாயை

    ரெம்டெசிவர் மருந்தை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம் மற்றபடி இந்த மருந்தை போட்டால் தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழல் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருசிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம். ஆனால் அனைவருக்கும் ரெம்டெசிவர் வேண்டும் என்ற தேவையற்ற மாயையில் இருக்கிறோம். இது அனைவருக்கும் தேவையான மருந்து இல்லை. அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை தேவையான அளவு இருப்பு இருப்பு உள்ளது. சுகாதாதாரத்துறை வழிமுறைகளின்படி யாருக்கு இந்த மருந்து தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வழங்குகின்றனர் என்றார்.

    99 சதவீதம் தேவையில்லை

    99 சதவீதம் தேவையில்லை

    இதனிடையே மருத்துவர்கள் பொதுவாக ரெம்டெசிவர் குறித்து கூறுகையில், கொரோனா நோயாளிகளில் 99 சதவீதம் பேர் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்துதல் மூலமாகவே குணமடைவர். அவர்களுக்கு பாராசிட்டமல் போன்ற காய்ச்சலுக்கான மாத்திரைகள் மட்டும் போதுமானது. மற்ற ஒரு சதவீத அதிக பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அவசியமாகும்

    எதுவும் செய்யாது

    எதுவும் செய்யாது

    அவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்காமல் இருத்தல், வெண்டிலேட்டர் பொறுத்தும் அளவுக்கு பாதிப்பு தீவிரமடையாமல் தடுத்தல், இறப்பை தடுத்தல் ஆகிய சிகிச்சைகள் தரப்படுகின்றன. இவற்றில் எதையும் ரெம்டெசிவர் மருந்து செய்யாது. காய்ச்சல் அதிகரிப்பதை தடுக்காது, இறப்பை தடுக்காது. எனவே இது ஒரு உயிர்காக்கும் மருந்தல்ல. இது, அனைத்தும் உலக சுகாதார நிறுவனம் போன்ற முக்கிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஆக்ஸிஜன் உதவு

    ஆக்ஸிஜன் உதவு

    ரெம்டெசிவர் மருந்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கால அளவு குறையலாம். 14 நாள்கள் தங்கி சிசிச்சை பெறும் காலத்தை 12 நாட்களாக குறைக்கும். ஐசியுவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு டெம்டெசிவரை பயன்படுத்த முடியாது. ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிக்சை பெறுபவர்களுகக்கு மட்டுமே ரெம்டெசிவர் பரிந்துரை செய்யப்படுகிறது. இதுதவிர, ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்து அல்ல. எனவே மருந்தை அதிக பணம் கொடுத்து வாஙக வேண்டாம். ரெம்டெசிவர் மருந்தை தேடி உறவினகர்கள் அலைய வேண்டாம்" இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

    English summary
    The Director of Public Health Selva Vinayagam said that remdesivir was not a life-saving drug and that the public should not look for it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X