அரிசிக்கு ஜிஎஸ்டியா? அநியாயம் என கொதிப்பு..ரைஸ்மில்கள் மூடல்.. அரிசி விற்பனை கடைகள் அடைப்பு
அரிசி மற்றும் உணவு தானியங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை: மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 47வது பொதுக்கூட்டம் சண்டிகரில் கடந்த மாதம் இறுதியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் பிரண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள் போன்ற வேளாண் பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதே சமயம் பேக் செய்யப்படாத மற்றும் பிராண்டட் இல்லாத பொருட்களுக்கு வரி இல்லை. இந்த வரி உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கத்தின் தலைவர் துளசிங்கம், "மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நடத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அரிசி, கோதுமை மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க போவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிடவில்லை.
மத்திய அரசு அரிசியின் மீது 5% வரியை விதிக்கும் பட்சத்தில், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும்.
மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இணைந்து, இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலைகள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரை தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்
செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.எம்.துரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.
நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து இன்று அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் இன்று நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications