ராஜ்மோகன் மீது டென்ஷனில் புஸ்ஸி ஆனந்த்.. காய் நகர்த்தும் ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் நடப்பது என்ன?
சென்னை: தவெகவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் இடையில் மோதல் வெடித்திருக்கிறது. ஏற்கனவே இயல், இசை, நாடக தலைவர் பதவிக்காக லயோலா மணி ஒருவரை அழைத்த்ய் வந்தார் என்று ராஜ்மோகன் பேசியதை புஸ்ஸி ஆனந்த் ரசிக்கவில்லை. தற்போது தவெக செய்தித் தொடர்பாளர்களின் கூட்டத்தை வாய்ஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் ராஜ்மோகன் நடத்தி இருக்கிறார். இதனால் ஆனந்த் உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளார்.
தவெகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் தேர்தலுக்கு முன்பு இருந்தே பணிப்போர் நிலவி வந்தது. புஸ்ஸி ஆனந்தின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா காய் நகர்த்தி வந்தார். தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் புஸ்ஸி ஆனந்தை கிண்டல் செய்து வந்தனர்.

தொடர்ந்து மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக தோல்வி அடைந்தால், என்னுடைய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த் கொந்தளித்துவிட்டார். ஏனென்றால் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக தான் இருக்கிறார். அதனை முழுமையாக பயன்படுத்தாமல் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் என்றே அடையாளப்படுத்தி கொள்கிறார்.
இதனிடையே இயல், இசை, நாடக தலைவர் பொறுப்புக்காக தம்பி லயோலா மணி ஒருவரை அழைத்து வந்து ரூ.5 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையாகியது. புஸ்ஸி ஆனந்த் அணியில் இருகும் லயோலா மணியை கோர்த்துவிட்டதால், அவர் அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக பள்ளி ஒன்றில் ஆய்வு செய்து, சுத்தமாக இல்லை என்று வீடியோ காலில் அழைத்து புகார் செய்தார்.
புஸ்ஸி ஆனந்த் வேறு எந்த துறை அமைச்சருக்கும் இப்படி வீடியோ கால் செய்து காட்டி புகார் அளித்ததே கிடையாது. தற்போது அடுத்தக் கட்டமாக தவெக செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்தை வாய்ஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நடத்தி இருக்கிறார். இதில் என்ன பிரச்சனை என்றால், இப்படியொரு கூட்டம் நடப்பதே புஸ்ஸி ஆனந்துக்கு சொல்லப்படவில்லை.
இதுவரை தவெக கட்சி கூட்டம் என்றால், அது பனையூரில் தான் நடக்கும். அதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் தலைமை தாங்குவார். தற்போது பனையூர் அலுவலகத்தில் இருந்து மாறி ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் கூட்டம் நடந்திருக்கிறது. இதனால் அமைச்சர் ராஜ்மோகன் மீது கடுமையான அதிருப்தியில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
