சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்லூரி மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..விரைவில் ரூ.1000..வங்கிக்கணக்கில் அரசு செலுத்தும்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வாட் வரி குறைப்பு...அதான் வரலாறு.. பழனிவேல் தியாகராஜன் சுளீர் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வாட் வரி குறைப்பு...அதான் வரலாறு.. பழனிவேல் தியாகராஜன் சுளீர்

 கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் கீதா ஜீவன்

அமைச்சர் கீதா ஜீவன்

இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும் என்றார்.

தொலை நோக்கு திட்டம்

தொலை நோக்கு திட்டம்

அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர் என்றார். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும், தாமதம் இருக்காது.

வங்கிக்கணக்கில் ரூ. 1000

வங்கிக்கணக்கில் ரூ. 1000

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.

காலை சிற்றுண்டி

காலை சிற்றுண்டி

தொடர்ந்து பேசிய அவர், 1-5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி நடத்துவது குறித்த தெளிவான விளக்கத்தை கல்வித்துறை கொடுத்துவிட்டது. சமூக நலத்துறை சார்பில் எல்.கே.ஜி யு.கே.ஜி நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்தார்.

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தைத் திருமணம் என்றே கருதப்படுகிறது .குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் நிலைமை மாறும் எண்ணிக்கை குறையும் என்றார்.

சத்துணவு முட்டை

சத்துணவு முட்டை

சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை என கூறிய கீதா ஜீவன், தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவுப் பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.

English summary
Rs 1,000 scheme for college students: (கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000)Social Welfare Minister Geetha Jeevan has said that arrangements are being made to provide a higher education stipend of Rs. 1,000 to students. Once the colleges are opened, a guarantee of Rs.1,000 will be paid directly into the student's bank account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X