போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும், அதன் பரபரப்பான பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

முன்னதாக கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பபட்ட ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது ரூ.4 கோடி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதோடு நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் தான் பணத்தை தந்து நெல்லைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும் தெரிவித்துள்னர்.

இதையடுத்து போலீசார் முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முருகன் போலீசாரிடம், ‛‛நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு பேசி பணத்தை அனுப்பி வைக்கப்படுவதை மட்டுமே கூறினார்’’ என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா? திமுக புகாருக்கு நெல்லை கலெக்டர் விளக்கம்
இது நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையி்ல தான் தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் மே மாதம் 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்மனை நேரில் வழங்க தாம்பரம் காவலர் ஒருவர் திருநெல்வேலி புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கில் கடந்த 22ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. மாறாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று தான் தற்போது நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு மே 2ம் தேதி ஆஜராகக்கோரி தாம்பரம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications