Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஏடிஎம்களில் திடீரென 500 ரூபாய் நோட்டுகள் மாயமாகுவதாக செய்திகள் கசிந்துள்ளன.. இதுகுறித்து போலீசார் சாட்டையை சுழட்டியதையடுத்து, அந்த பல கோடி ரூபாய் ரகசியப் பதுக்கல் வேட்டை சம்பவமும் வெளியாகி உள்ளது.. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் என்ன நடக்கிறது??

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

500 Rupee notes banned

ரூ.500 நோட்டு தட்டுப்பாடு

கடந்த சில நாட்களாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல், வெறும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளிவருவது அன்றாடப் புழக்கத்தில் பெரும் சிக்கலை உண்டாக்கி உள்ளதாம்..

குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல ஏடிஎம்களில் கடந்த இரண்டு நாட்களாகவே 500 ரூபாய் நோட்டுகள் வரவு வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் ஒரு நேரத்தில் குறைந்த அளவிலான தொகையை மட்டுமே எடுக்க முடிகிறது.

இந்தத் திடீர் தட்டுப்பாட்டிற்குப் பின்னால் தேர்தல் கால அரசியல் பதுக்கல் வேலைகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியவை ஒவ்வொரு தொகுதியிலும் பூத் வாரியாக வாக்காளர் பட்டியலைத் தயார் செய்து, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மதுரை ஏடிஎம்கள்

இதற்காக ஸ்பெஷலாக முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் 100 வாக்காளர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு வாக்காளருக்கு ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் வரை கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போதே லட்சக்கணக்கில் 500 ரூபாய் நோட்டுகளைப் பெரிய அளவில் சேகரித்து ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ளனர்.

"தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சந்தையில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் உண்மையிலேயே குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை" என்று வங்கி அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகிறார்.

வங்கிகளில் இருந்து வெளியேறும் பெரிய மதிப்புடைய நோட்டுகள் மீண்டும் வங்கிக்குத் திரும்பாதது பணச் சுழற்சியை பாதித்துள்ளதாக தெரிகிறது.. . 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைக் கையாள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே 500 ரூபாய் நோட்டுகளின் பதுக்கலுக்கு முக்கியக் காரணமாகவும் சொல்லப்படுகிறது.

வெறும் 100 ரூபாய் நோட்டுகள்

இது தொடர்பாக முக்கிய கட்சி ஒன்றின் சில நிர்வாகிகள் சொல்லும்போது, "தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை முறையாகக் "கவனிப்பது" மிக அவசியம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது, 2,000 ரூபாயை 200 அல்லது 100 ரூபாய் நோட்டுகளாக ஆயிரக்கணக்கில் கொடுப்பதும், அதைக் கையாள்வதும் மிகவும் சிரமமான காரியம். அதைத் தவிர்க்கவே நாங்கள் 500 ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்துகிறோம்.

சொல்லப்போனால், 2016ம் ஆண்டுக்கு முன்னால் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தபோது எங்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய மிகவும் வசதியாக இருந்தது" என்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் ஆக்‌ஷன்

தேர்தல் ஆணையம் பணப் பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையிலும், வேட்பாளர்களின் இந்த பதுக்கல் வேட்டை சாதாரண மக்களைக் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. சிறு தேவைகளுக்காகக் கூட மக்கள் ஏடிஎம்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பணப் பரிவர்த்தனை தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலில், 500 ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+