சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி! நாளைமறுநாள் போலீஸ் அறிக்கை தாக்கல் செய்யனும்: ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறு நாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2 தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நவம்பர் 6 இல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறை அனுமதி நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நவம்பர் 6 இல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறை அனுமதி

விசாரணைக்கு வந்தது

விசாரணைக்கு வந்தது

இந்த வழக்குகள் கடந்த முறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 6 ஆம் தேதி ஊர்வலம்

நவம்பர் 6 ஆம் தேதி ஊர்வலம்

இதையடுத்து, நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6 ஆம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

டிஜிபி உத்தரவு

டிஜிபி உத்தரவு

அப்போது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

English summary
Chennai HC orders Police department to submit report on giving permission for RSS rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X