சேலம் ஜங்சனில் இளம் ஜோடி பார்த்த வேலை.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லயே! நூல் பிடித்து சென்ற போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் ரயில் நிலையத்தில், ஆண் குழந்தை சடலத்தை ஒரு ஜோடி வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு, பெங்களூர், சென்னை ஆகிய பகுதிகளுக்குச் சென்ற போலீசார், அந்த ஜோடியை அடையாளம் கண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த ஜோடியின் புகைப்படங்கள் சிக்கியிருக்கும் நிலையில், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்கின்றனர் போலீசார். இந்நிலையில் குழந்தையின் சடலத்தை வீசி விட்டு அவர்கள் சிரித்தபடி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

சேலம் ரயில்வே ஜங்ஷன் சைக்கிள் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் அருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து தகவலின் பேரில் சூரமங்கலம் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அந்த குழந்தையைக் கொன்று வீசிவிட்டுச் சென்றார்களா? குழந்தையின் பெற்றோர் யார்? என விசாரணை நடத்தினர். ஆனால் தகவல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மூன்று தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

Salem Train Station Shock

சேலம் குழந்தை கொலை

ட்ரான்ஸ்பார்மர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் தோளில் சுமந்து கொண்டு வரும் குழந்தையை அங்கே போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது. அப்பெண் மீண்டும் ஜங்ஷனுக்குச் சென்றதும் அவருடன் வாலிபர் ஒருவர் இணைந்து சென்று கவுண்டரில் டிக்கெட் எடுத்துக் கொண்டு இரவு 1.10 மணிக்கு வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த கேமரா பதிவு எடுத்துக் கொண்டு தனிப்பட்ட முறையில் பெங்களூருக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ஜோடி குற்றம்

பெங்களூர் ரயிலில் இருந்து இறங்கிய ஜோடி மெஜஸ்டிக் பேருந்து நிலையம் சென்றது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் பெங்களூர் வரை போலீசார் நூல் பிடித்துச் சென்று குழந்தையை வீசிச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து சென்ற புலனாய்வை அதிகாரிகள் பாராட்டினர். என்றாலும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வந்து ஜங்ஷனில் இறங்கிய வீடியோ காட்சிகளை வைத்து புதிய பஸ் நிலையம் வந்த தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு சென்னை

இதில் அங்கம்மாள் காலனி இறங்கும் பகுதியில் இருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி அந்த ஜோடி வந்தது தெரிய வந்தது. அவ்வழியாக சென்ற பஸ்களை வைத்து விசாரித்த நிலையில் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்னசேலம் வரை போலீசார் விசாரணை தொடங்கினர். ஆனாலும் அங்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த வாலிபர் அணிந்திருந்த டீசர்ட் பெயர் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. இது போன்ற டீசர்ட் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் ஆர்டர் கொடுத்து வீரர்களுக்கு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார்

அவரை பிடித்து விசாரித்த பொழுது குறிப்பிட்டு எண் கொண்ட டீசர்ட் வாங்கிய வாலிபரை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு வழியாக குழந்தையை வீசிய வாலிபரை நெருங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த பொழுது தனது டீசர்டை காணவில்லை என போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார். அந்த படத்தில் இருக்கும் அந்த வாலிபர் யார் என்று தெரிகிறதா? என கேட்ட பொழுது தெரியாது என்று கூறிவிட்டார். இதனால் தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

சேலம் போலீஸ்

அந்த பெண் பெங்களூரை சேர்ந்தவரா போன்றும், வாலிபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் போலவும் இருக்கின்றனர். இதனை அடுத்து சிசிடிவி கேமராவில் சிக்கிய இந்த ஜோடி யார் என்பது தெரிந்தவர்கள் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்குமாறு புகைப்படத்துடன் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்து வரும் போலீசார் பெங்களூரில் கன்னடத்தில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்ய உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+