புரட்டாசியில் புக் பண்ணி.. ஐப்பசியில் அடிச்ச யோகம்! சரத்குமார் பெயரை டிக் அடித்த மோடி! கலகல கமலாலயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது தொடர்பாக டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பதவிக்கான பெயர் பட்டியலில் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதுதொடர்பாக ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக டெல்லி மேலிடம் ஆலோசனையை தீவிரப் படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. தலைவருக்கான பட்டியலில் நடிகரும் முன்னாள் எம்பியுமான சரத்குமாரின் பெயர் பலமாக அடிபடுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட சரத்குமாரின் பெயருக்கு ஓகே சொல்லிவிட்டதாக சொல்கின்றனர். 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.

Sarathkumar

தமிழக பாஜக

குறிப்பாக இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தமிழக பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது அவரது செயல்பாடுகள் அரசியலில் ஓரளவு கவனம் பெற்றன. ஆனால் மக்களவைத் தேர்தலில் அவரது பேச்சைக் கேட்டு சூடு போட்டுக் கொண்டது பாஜக.

நயினார் நாகேந்திரன்

இதை அடுத்து சட்டசபை தேர்தலில் அவரை ஓரம் கட்டி விட்டு நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கியது. ஆனாலும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வி தான் மிஞ்சியது. இதற்கிடையே ஒட்டுமொத்தமாக தமிழக பாஜகவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது டெல்லி பாஜக. குறிப்பாக மாநில தலைவர் தொடங்கி பல்வேறு தளங்களில் தலைவர்கள் மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

வானதி சீனிவாசன்

அதனால் தான் மத்தியில் தமிழகத்தின் முகமாக இருந்த எல்.முருகனை ராஜினாமா செய்ய் வைத்து விட்டு வானதி சீனிவாசனை ஆந்திரா பொறுப்பாளராக அனுப்பிவிட்டனர். மேலும் ஏற்கனவே கோலாச்சி வந்த பல முன்னணி தலைவர்களும் ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார் மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன.

சரத்குமார்

ஏற்கனவே எம்பி, எம்எல்ஏ என அரசியல் அனுபவத்தோடு, நடிகராக தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் சரத்குமார். அது மட்டுமல்லாமல் அடிக்கடி அதிரடி அரசியலும் செய்வார். இதனால் 2029 நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்க பாஜக முயன்று வருகிறது. ஏற்கனவே சரத்குமாருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் இடையே திரைத்துறை பின்னணி உண்டு.

அமித் ஷா

மேலும் இருவரும் இணக்கமாகவே பேசி வருகின்றனர். இதை அடுத்து இதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்க முடியுமா என பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னரே சொன்னது போல சரத்குமார் தமிழக மக்களிடையே அறிமுகமான முகம் என்பதால் மாநில தலைவர் பொறுப்பை அவருக்கு வழங்கினால் கட்சிக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்து பலமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்கின்றனர்.

கமலாலயம்

கட்சியிலிருந்து சேர்ந்ததிலிருந்து சரத்குமாருக்கு எந்தவித பெரிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து கட்சியிலேயே பயணித்து வருகிறார். அதனால் ஒரு வாய்ப்பை வழங்கி பார்க்கலாம் என பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட சரத்குமாரின் பெயரை டிக் செய்து விட்டார் மோடி என்கின்றனர். விரைவில் தலைமை தொடர்பான அறிவிப்புகள் வெளிவரலாம் என்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். அதே நேரத்தில் பல ஆண்டுகளாக கமலாலயத்தில் லாபி செய்து வரும் ஒரு கும்பல் கலங்கி போயிருப்பதாகவும் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+