Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளவுத்துறையில் கூடுதல் பதவி...அரசியலை கவனிக்க எஸ்.பி நியமனம்...தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை கூடுதல் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய ஆட்சியில் இருக்கும் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். முதலில் மாற்றப்படுவது தலைமை செயலாளர்தான்.

உளவுத்துறையின் பங்கு

உளவுத்துறையின் பங்கு

இதனை தொடர்ந்து உளவுத்துறை மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். ஒரு ஆட்சியில் உளவுத்துறையின் பங்கு என்பது மிகப்பெரியதாகும். இதனால் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப உளவுத்துறையில் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, ஐஜி, எஸ்.எஸ்.பி ஆகிய பதவிகளில் நம்பிக்கையானவர்களை நியமிப்பார்கள். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழக டி.ஜி.பி மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறையின் ஒட்டு மொத்த அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

எஸ்.எஸ்.பி.க்கு பவர்

எஸ்.எஸ்.பி.க்கு பவர்

தற்போது உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், எஸ்.எஸ்.பி.யாக அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். ஐ.ஜி பதவி காலியாகவே உள்ளது. உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்.பி பதவிக்குதான் பவர் அதிகமாக இருக்கும், ஏனென்றால் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள அத்தனை நிகழ்வுகளும், தகவல்களும் கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் இவரிடம்தான் போய்ச்சேரும். இவர்தான் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு அண்ட் தகவல்களை அளிப்பார். இத்தகைய அதிகாரமிக்க இந்த பதவியில் இப்போது அரவிந்தன் உள்ளார்.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

இந்த நிலையில் தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்.எஸ்.பி பணியிடத்தை அரசு உருவாக்கி இருப்பது தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் சரவணன் என்பவர் நியமிப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

புதிய பணியிடம்

புதிய பணியிடம்

சரவணன் தற்போது ஒருங்கிணைந்த குற்றங்கள் தொடர்பான உளவுப் பிரிவு எஸ்.பி.யாக உள்ளார். முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் உளவுத்துறை டி.எஸ்.பி.யாக சரவணனும், விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட ஜெயசங்கரும் தமிழக அரசியல் கள நிலவரத்தை விரல்நுணியில் வைத்திருந்தவர்கள். ஆட்சி மாற்றம் காரணமாக இருவரும் துாக்கி அடிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சரவணன் தான் உளவுத்துறை எஸ்.பி.யாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மாத தாமதங்களுக்கு பிறகு புதிய பணியிடம் உருவாக்கி அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல பெயர் எடுத்தவர்

நல்ல பெயர் எடுத்தவர்

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சரவணன், தான் பணியாற்றிய மாவட்டங்களில் அதிகாரிகளுடமும், மக்களிடமும் நல்ல பெயர் எடுத்தவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் நண்பனாகவே மதிக்கப்பட்டவர். இனிமேல் அரசியல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சரவணன் கவனிப்பார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+