• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சர்கார் படத்திலேருந்து சென்சார் செஞ்சிட்டீங்க... டிக்டாக்ல எப்படி கட்டுப்படுத்துவீங்க!

|

சென்னை : சர்கார் படத்தில் இலவச பொருட்களை எரிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு போராட்டமாக மாறி தியேட்டர் முற்றுகை போராட்டமானதால் சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. ஆனால் படத்தில் நீக்கிவிட்டாலும் டிக்டாக்கில் பலர் இலவசங்களை எரிப்பது போல காட்சிகளை பதிவிட்டு வருகின்றனரே இதை எப்படி தடுப்பது.

சர்கார் திரைப்படம் வெளியானது முதல் ஆளும் சர்காரின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறது இந்த திரைப்படம். முழுக்க முழுக்க அரசியல் படமான இதில் ஒரு கட்சியையே தாக்குவது போல காட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

குறிப்பாக முதலமைச்சராக வரும் பழ. கருப்பையாவின் மகளான கோமளவள்ளி(வரலட்சுமி)யை அவரது கட்சிக்காரர்கள் இடுப்பு வரை விழுந்து கும்பிடுவது. அதிகாரத்திற்காக கோமளவள்ளி எதையும் செய்யத் துணிந்தவர் என்று காட்டப்பட்டுள்ளது. கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரை குறிப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.

[சீக்கிரம் வாங்க.. கட்சி ஆரம்பிங்க.. விஜயை அரசியலுக்கு அழைக்கும் உயிர் ரசிகர்கள்!]

இலவசங்கள் வேண்டாம்

இலவசங்கள் வேண்டாம்

ஆனால் அது ஜெயலலிதாவின் பெயரே அல்ல என்று சிலர் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் விஜய் தமிழக அரசு கொடுத்த இலவசப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், பேன் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களே வேண்டாம் என்பதை ஆணித்தரமாக சொல்லும் இந்த இடம் ஆட்சிக்காரர்களை கடுப்பாக்கியுள்ளது.

போராட்டம்

போராட்டம்

இலவசம் வேண்டாம் என்று விஜய் நேரில் சொல்லட்டும், இலவசங்களை வாங்கிய மக்களை விஜய் இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சர்கார் மீது அதிமுகவினருக்கு இருந்த கோபம் தலைக்கேற நேற்று பேனர் கிழிப்பு, தியேட்டரில் போராட்டம் என்று உச்சகட்டத்தை எட்டியது.

சென்சார் செய்ய ஒப்புதல்

சென்சார் செய்ய ஒப்புதல்

இதனால் படக்குழுவினர் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்பு கொண்டனர். இதன்படி இன்று சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கைக்குப் பின்னர் பிற்பகலில் திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.

அமைச்சர்கள் எதிர்ப்பு

அமைச்சர்கள் எதிர்ப்பு

சர்கார் படத்திற்கு எதிராக என்னென்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் நேற்றைய தினம் அவசர ஆலோசனையை நடத்தினார். இலவசங்களை விஜய் எரித்தது தவறு என்று அமைச்சர்கள் பலரும் கருத்து சொல்லி இருக்கின்றனர், திரைப்படத்தை எதிர்த்து அந்தக் காட்சிகளையும் எப்படியோ சென்சார் செய்ய வைத்துவிட்டனர்.

மியூசிக்கலியில எப்படி கட்டுப்படுத்துவீங்க

ஆனால் இப்போது தான் அரசுக்கு உண்மையான சவாலே இருக்கிறது. திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினாலும் டிக்டாக்கில் பலர் இலவச பேனை தூக்கி நெருப்பில் போடுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் அவர்களை எப்படி அரசு கட்டுப்படுத்தப் போகிறது.

 
 
 
English summary
Sensitivity scenes from Sarkar movie censored after admk cadres staged protest in front of theatres but the new headache for government is many were uploading videos of firing freebies in TIkTok how it could be controlled.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more