தீமைகள் நம்மை விட்டு விலகட்டும் - அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வாழ்த்து

தீபாவளி திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் பெருமழையும் பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று, நன்மைகள் பிரகாசிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் ,அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Sasikala extends Deepavali greetings - Deepavali to get rid of intrigues and evils

பெருந்தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில், இந்த தீபாவளி திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவதுடன் தடுப்பு ஊசியையும் ,தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோஷத்துடன் இந்த தீபாவளித் திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என்று பெயரில் சசிகலா இந்த தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து மதுரை தேவர் சிலைக்கு மரியாதை செய்தார் வி.கே.சசிகலா

    அரசியலை விட்டு விலகப்போவதாக கூறிய சசிகலா, ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அரசியல் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு பலரையும் சந்தித்தார் சசிகலா. இப்போது தனது ஆதரவாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார் சசிகலா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+