நான் வர்றேன் தனியா.. எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் சசிகலா! ஸ்கெட்ச் யாருக்கு?
சென்னை: அதிமுக பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் 'ஒரு வழியாக பிரச்னை ஓய்ந்தது' என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் செப்.11, 12ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலை நாட்டிடவும் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு
அதிமுக பொதுச் செயலாளர் குறித்த சர்ச்சைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்படி ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது செல்லுபடியாகியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்
இந்நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். தற்போது இந்த அரசியல் சலசலப்புக்கிடையே சசிகலா மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலை நாட்டிடவும் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் செப்.11, 12ம் தேதி சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொள்கிறார்.

திமுகவை எதிர்த்து
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக தலைமையிலான ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்திடவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலைநாட்டிடவும், புரட்சித்தாய் சின்னம்மா சேலம், ஈரோடு மாவட்டங்களில் தனது புரட்சிப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித் தலைவியின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.

தஞ்சையில்
இதற்காக வருகின்ற செப்.07 புதன் கிழமையன்று காலை தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றடைகிறார். அதன்பின் மறுநாள் வியாழக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி, பாமணி என்கிற இடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் காலை நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் 11ம் தேதி தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர், வீரகனூர் வழியாக தலைவாசல் சென்றடைந்து பிற்பகல் 2.30 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை மேற்கொள்கிறார்.

சேலத்தில்
சேலம் ஆத்தூர் பேருந்து நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில், சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும் பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார். அதன் பிறகு 12ம் தேதியான மறுநாள் பிற்பகல் 3 மணியளவில் அரியானூரிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்கிறார் சசிகலா.

ஈரோட்டில்
அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி எடப்பாடி பிரிவு, பள்ளிப்பாளையம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு திண்டல் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார். இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் புரட்சித்தலைவி வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கழக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் எனும் பெயரிடப்பட்டு வந்துள்ளது.

நோக்கம்
ஈபிஎஸ்க்கு ஆதரவாக உயர்நீதிமன்ற தீரப்பு வெளிவந்துள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும் என சசிகலா இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த பயணத்தில் அதிக அளவில் மாஸ் காட்ட வேண்டும் என சசிகலா ஆதரவாளர்களுக்கு உத்தரவுகள் பறந்துள்ளது. ஈபிஎஸ் கோட்டையில் கால் வைத்தாலும், நோக்கம் என்னவோ திமுகவை எதிர்த்துதான் இருக்கிறது என்பதால் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் இந்த பயணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications