சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா புஷ்பா.. அன்று முதல் இன்றுவரை ஓயாத சர்ச்சை.. லேட்டஸ்ட் லிஸ்டில் "பெட்ரூம் புகார்!"

சசிகலா புஷ்பா மீது மற்றொரு குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத சசிகலா புஷ்பா மீது மீண்டும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.. அந்த புகார் உண்மையா பொய்யா என தெரியவில்லை.. ஆனால், தமிழகம் முழுவதும் அந்த புகார் தீ பற்றிக் கொண்டுவிட்டது..!

Recommended Video

    சசிகலா புஷ்பா பெட்ரூமில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர்: போலீசில் 2வது கணவர் பரபரப்பு புகார்!

    தமிழகம் மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய அரசியலிலும் புயலை கிளப்பியவர் சசிகலா புஷ்பா... வழக்கமாக பெண் அரசியல்வாதிகள் அதிரடிகளுக்கு பெயர் போனவர்.. அதில் இந்த சசிகலா புஷ்பா சர்ச்சைகளுக்கும் சேர்த்தே தேசிய அளவில் புகழ் பெற்றவர்.

    ஆரம்பத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தூத்துக்குடி நகராட்சி மேயரானார் சசிகலா புஷ்பா, 2014ம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்..

    தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? எந்த வகுப்புக்கு? அமைச்சர் அன்பில் வெளியிட்ட தகவல் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? எந்த வகுப்புக்கு? அமைச்சர் அன்பில் வெளியிட்ட தகவல்

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆனால், மேயராகவோ, அதிமுகவின் எம்பியாகவோ அதுவரை அறியப்படாமல் இருந்த நிலையில், திடீரென ஒருநாள் நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனார்.. "ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார்" என்று சொல்லி கடந்த 2016ம் ஆண்டு மாநிலங்களவையிலேயே பரபரப்பை கிளப்பினார்... இதுவரை எந்த பெண்ணும், இப்படி ஒரு பகீரத குற்றச்சாட்டை மாநிலங்களவையில் அத்தனை பேர் முன்பு பகிரங்கமாக சொன்னது கிடையாது.. அம்மா என்னை அடித்தார் என்று அவர் அழுது புலம்பியதை நாடே வேடிக்கை பார்த்தது. காரணம், குற்றஞ்சாட்டப்பட்டது அன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது..!

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.. அதேசமயம் வேறு சில கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய சசிகலா புஷ்பா, தன்னுடைய எம்பி பதவியை கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் சபாநாயகர் பறிக்க கூடாது என்றும் சுயேட்சை எம்பியாக அறிவிக்க கோரியும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. இதற்கு பிறகு சத்தமில்லாமல் ஒதுங்கி கிடந்த சசிகலா, மறுபடியும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லைம்லைட்டுக்கு வந்தார்.

     பரபரப்பு

    பரபரப்பு

    அக்கட்சியின் பொது செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக விருப்பமனு வழங்கப்பட்டபோது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் அலுவலகத்தில் விருப்பமனு வாங்க வந்தார் சசிகலா புஷ்பாவின் முதல் கணவர் லிங்கேஸ்வரன்.. அப்போது அவரை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அன்றைய தினம் ஏற்படுத்தியது.. இதற்குநடுவில் திடீரென சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா 2வது கல்யாணம் செய்து கொண்டது அதற்கு மேல் பரபரப்பை கூட்டிவிட்டது.

    நெருக்கம்

    நெருக்கம்

    அந்த 2வது கணவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கத்தில் பொறுப்புகளை வகித்து வருபவராம்.. அதன் மூலம் பாஜக தலைவர்களிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார் சசிகலா புஷ்பா.. திடீரென மோடியை ஓவராக புகழ ஆரம்பித்தார்.. பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும் பேச தொடங்கினார்.. தமிழ்நாட்டில் யாருமே பிரதமர் மோடியையும் அவர் கொண்டு வந்த திட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை, அதனால் அதையெல்லாம் நான் மாற்றி காட்ட போகிறேன் என்று சவால் விட்டார்.. இறுதியில் அக்கட்சியில் இணைந்தும் விட்டார். முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் பாஜகவில் ஐக்கியமானார்.

     அதிமுக புள்ளிகள்

    அதிமுக புள்ளிகள்

    இதற்குபிறகு, சில அதிமுக முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கி பாஜக பக்கம் கொண்டு வர சசிகலா புஷ்பாவுக்கு மேலிடம் அசைன்மென்ட் தந்திருப்பாகவும், அந்த வேலையில் சசிகலா இறங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.. ஆனால், அந்த விஷயம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.. ஆனால், தன்னுடைய இத்தனை கால டெல்லி வாசத்தில், அங்கு பல விஐபிக்கள், அரசியல் தலைகளின் அறிமுகங்களையும் நட்பையும் பெற்றுவிட்டார் சசிகலா புஷ்பா..

     போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    இதனிடையே, எம்பி தேர்தல் நடந்து முடிந்த சமயத்தில், சசிகலா புஷ்பாவுக்கு தமிழக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தார்கள்.. அது எதற்கான வாழ்த்து என்றே இப்போது வரை தெரியவில்லை.. "அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு 'வீரமங்கை', 'பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்' என்ற பட்டங்களுடன் நாடார் சமுதாயம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. தமிழகத்தின் ஜான்சி ராணி, சிங்க பெண்' என்று புகழ்ந்து தள்ளும் அளவுக்கு சசிகலா புஷ்பாவின் சாதனைகள் இதுவரை என்னவென்று தெரியவில்லை..

     படுக்கையறை

    படுக்கையறை

    ஆனால், இப்போது ஒரு புது பிரச்சனையில் சிக்கி உள்ளார்.. இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டு வந்திருப்பவர் அவரது 2வது கணவர்தான்.. ஆன்லைன் மூலமாக போலீசுக்கே புகார் தந்துவிட்டார்.. ஒருநாள் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது, அங்கே சாப்பாடு பொட்டலங்கள் சிதறி கிடந்துள்ளாம்.. மதுவாடை வந்ததாம்.. பெட்ரூமில் சசிகலா புஷ்பா படுத்திருந்தபோது, இன்னொரு ரூமில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை டிரஸ்ஸில் இருந்தாராம்.. அவர் யார் என்று தெரியவில்லை, தன்னுடைய மனைவி மீது நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுள்ளார்..

     நடவடிக்கை

    நடவடிக்கை

    உண்மையிலேயே தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. கணவர் தந்த புகார் உண்மையா? பொய்யா? மனைவி மீதான காழ்ப்புணர்ச்சியால் தரப்பட்டதா? என்றும் தெரியவில்லை. இதன் உண்மை தன்மையை போலீசார்தான் வெளிக்கொணர வேண்டும்.. ஆனால், தமிழக அரசியலில் அடிக்கடி சூறாவளி வீசும் என்றால், அங்கே சசிகலா புஷ்பாவின் பெயரும் கட்டாயம் அடிபடும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இதுதான்!

    English summary
    Sasikala Pushpas second husband Ramasamy complaint against wife and Sasikala Pushpas Controversies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X