"கழன்று கொண்ட" இளவரசி? "ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன்.." சசிகலாதான் கூட இருந்ததாக வாக்குமூலம்
சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி பதிலளித்தார். ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாக அவர் கூறியுள்ளார்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்ததாக இளவரசி கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 4 மாத கால சிகிச்சைக்குப் பிறகு அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆணையத்தில் விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆணையத்தின் விசாரணையானது கடந்த 7ஆம் தேதி தொடங்கியது . 7 ,8 ,15 தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

ஜெயலலிதா உடல்நல பாதிப்பு
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்ததாகவும் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்திய போது ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இளவரசி ஆஜர்
ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதனையேற்று இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். அவரது மகன் விவேக்கும் உடன் வந்துள்ளார். ஏற்கனவே விவேக்கிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் இளவரசியிடம் தற்போது விசாரணை நடத்துகிறது ஆறுமுகசாமி ஆணையம்.

என்னென்ன கேள்விகள்
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மறைவுக்குப் பிறகு போயஸ்தோட்டத்திலேயே தங்கிவிட்டார் இளவரசி. 2011ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தினரை தோட்டத்தை விட்டு அனுப்பினார் ஜெயலலிதா. பின்னர் சில மாதங்களில் சசிகலா மட்டும் போயஸ் தோட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தும் மருத்துவமனையில் அவரை யார் யார் கவனித்துக்கொண்டனர் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.

கண்ணாடி வழியாக பார்த்தேன்
ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த இளவரசி அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்ததாக கூறினார். 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா மட்டுமே உடனிருந்ததாகவும் இளவரசி கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றதில் இருந்தே அவர் மன உளைச்சலில் இருந்தாக இளவரசி கூறினார். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் போது ஜெயலலிதாவிற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications