Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவை நான் கொன்றதாக கதைகட்டினர்! அப்பல்லோவில் என்ன நடந்தது? சசிகலா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கமுதி: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் கொன்றுவிட்டதாக எதிரிகள் வெளியே கதைகட்டி விட்டனர் என சசிகலா உருக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஜெயலலிதாவுக்கு எப்படி மரணம் நடந்தது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கமுதியில் நடந்த கூட்டத்தில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என நினைத்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

Sasikala

மருத்துவர்கள் அவரது உயிரை காக்க கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார். ஆனால் அவரை நான் கொன்றுவிட்டதாக எதிரிகள் வெளியில் கதைக் கட்டி விட்டனர். அரசியலுக்காக இது செய்யப்பட்டது. இதை யார் நம்புவார்கள்? என சசிகலா உருக்கமாக கேள்வி எழுப்பினார்.

சிறையில் என்ன நடந்தது

அவர் மேலும் பேசுகையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த போது சென்னை சிறைக்கு மாற்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம் என்ற பகீர் தகவலை தெரிவித்திருந்தார்.

பரபரப்பு தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்தும் அவர் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் உடல்நிலை சரியானதும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமாகிவிட்டதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

கடைசியாக செப்டம்பர் 22, 2016இல் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு

அப்போதுதான் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு வரும்போதே அவரால் நடக்க முடியவில்லை. அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டே நடந்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் மாநில முதல்வராக பணிகளை செய்து வந்தார். அப்பல்லோவில் சுமார் 70 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தார்.

தொண்டர்கள் கண்ணீர்

அத்தனை நாட்களும் அப்பல்லோ வாசலில் ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். ஜெயலலிதா மீண்டு வர பல்வேறு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.

அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அன்று முழுவதும் அவரது உயிரை காக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ஆம் தேதி பிரிந்தது.

ராஜாஜி ஹாலில் அஞ்சலி

அவரது உடலுக்கு எம்பார்மிங் செய்யப்பட்டு ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களும் ஜெயலலிதாவின் அனுதாபிகளும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். ஆனால் இதற்கெல்லாம் அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துவிட்டது. மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தினார். அந்த கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ததும் அதில் பல்வேறு தகவல்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஜெயலலிதாவுடன் சசிகலா 30 ஆண்டுகள் பயணித்திருந்த நிலையில் அவரது கடைசி காலத்தில் அப்பல்லோவில் இருந்து பார்த்துக் கொண்டதும் அவர்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+