நான் வந்தாதான் சரிபட்டு வரும்.. எல்லாத்தையும் மாத்துவோம்.. 2017 கோபத்துடன் ஆடியோவில் சசிகலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கொடி கம்பங்களில் கட்சி கொடியே இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளதாக சசிகலா தொண்டரிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதில் எதிராளியிடம் சசிகலா பேசுவதை பார்த்தால் அதிமுகவை கைப்பற்றாமல் இருக்க மாட்டார் போல தெரிகிறது.

அதிலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கொங்கு மண்டலத்தினரை மட்டுமே குறி வைத்து சசிகலா பேசி வருவது பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

இந்த நிலையில் திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி, திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றி, சோளிங்கரை சேர்ந்த உதயகுமார், கோவையை சேர்ந்த ஷேக் முகமது, புதுக்கோட்டையை சேர்ந்த அமுதா ஆகியோரிடம் சசிகலா பேசியுள்ளார்.

நான் அப்படி இல்லை

நான் அப்படி இல்லை

அதில் எல்லாரும் பதவிக்காக ஆசைப்படுவார்கள். ஆனால் நான் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட்டதே இல்லை. இது எல்லாருக்குமே தெரியும். எல்லாமே நல்லபடியா நடக்கும், கட்டாயம் வந்துருவேன், கட்சியை அழிக்க இனியும் விடமாட்டேன்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

நிர்வாகிகளை விட எனக்கு தொண்டர்கள்தான் முக்கியம், தொண்டர்களை நான் கைவிடவே மாட்டேன். என்னை பற்றி பழைய ஆட்களுக்கு நல்லாவே தெரியும். சென்னையில் பல இடங்களில் கொடி கம்பமும், கல்வெட்டும் இருக்கிறது. ஆனால் கம்பத்தில் அதிமுக கொடி இல்லை என தொண்டர்கள் வருந்துகிறார்கள்.

Recommended Video

    Sasikala Leaked Audio | முக்கிய தகவல்களை பரிமாறிய சசிகலா | Oneindia Tamil
    பெண்கள்

    பெண்கள்

    இதையெல்லாம் கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் கவனிப்பதே இல்லை. கட்சியை சரியா கவனிக்கிறதே இல்லைனு தான் தொண்டர்கள் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதையெல்லாம் செய்யுறதுக்கு அவங்களுக்கு நேரமே இல்லைனு நினைக்கிறேன். நான் வந்துதான் எல்லாத்தையும் சரி செய்து ஆகணும். பெண்கள் நினைச்சா, எல்லாத்தையுமே திறம்பட செய்வோம், எல்லாத்தையும் மாற்றி காட்டுவோம் என சசிகலா சூளுரைத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+