சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உரிய நேரம்.. உரிய காலம்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா.. முன்னாள் எம்எல்ஏ பரபர!

Google Oneindia Tamil News

சென்னை: உரிய நேரத்தில் உரிய காலத்தில் சசிகலா அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் கூறியுள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பில் இருக்கும் சூழலில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் படிகளை நாடியுள்ளார்.

Sasikala will come to AIADMK Headquarters says Ex MLA Narasimman in Chennai

இதனிடையே அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா பேசி வருகிறார். ஆனால் டிடிவி தினகரனோ, ஓபிஎஸ்-ற்கு ஆறுதலாகவும், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று குறிப்பிடுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலத்தில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் இணைந்து செயல்படும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வந்த சசிகலா, நேற்று தனது ஆதரவாளர்களை இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் அதிமுக எம்எல்ஏ நரசிம்மன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சசிகலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் பார்க்க முடியாது.. தூதுவரை வைத்து அதெல்லாம் பார்க்க முடியாது.. தூதுவரை வைத்து

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நரசிம்மன் கூறுகையில், அதிமுகவில் சுய லாபத்திற்காக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். சில காலம் மட்டுமே இது நீடிக்கும். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் முடிந்த பின்னர் உரிய நேரத்தில் உரிய காலத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவார் என்று தெரிவித்தார்.

Recommended Video

    Sasikala உடன் OPS Team இணைவதாக வந்த செய்தி | பதில் சொன்ன OPS தரப்பு *Politics | Oneindia Tamil

    ஆகஸ்ட் 15ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில், மறுபக்கம் சசிகலா முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பிலும், கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி மூன்று பேரும், மூன்று பக்கம் தொண்டர்களை சந்தித்து வருவதால், விரைவில் மூவரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Former AIADMK MLA Narasimhan has said that Sasikala will come to the AIADMK head office at the appropriate time, which has created various expectations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X