Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்?

Subscribe to Oneindia Tamil

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையை பெரிதும் பாதித்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து தடைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து, விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.

இந்த சூழலில், கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முக்கிய நாடாக திகழும் சவுதி அரேபியா தனது முக்கியமான 'Arab Light' கச்சா எண்ணெய் விலையை மே மாதத்திற்கு ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

Saudi Arabia Saudi Aramco Crude oil Saudi Aramco Price Hike Asia Arab Light Crude Premium 2026 Hormuz Crisis Oil Prices India Petrol Diesel Fear Saudi Oil Premium Record Saudi Aramco Arab Light premium Arab Light crude price hike Asia Saudi oil price increase May 2026 Strait of Hormuz disruption Saudi 19 50 premium Arab Light India crude oil import impact petrol diesel price rise India Oman Dubai benchmark premium Saudi Arabia oil to Asia global oil market instability 2026 Brent crude price surge Hormuz OPEC production increase warning Indian refineries higher crude cost Saudi oil supply reduction Asia fuel price hike concern India 2026 19 50

ஹார்முஸ் தடைகள்
வளைகுடாவில் இருந்து உலக சந்தைகளுக்கு செல்லும் எண்ணெய் பெரும்பாலும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், ஈரான் மோதல்கள் காரணமாக இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் வெளியேறும் அளவு குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ள நிவையில் உலகளவில் தேவை தொடர்ந்து நீடித்து வருவதால் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

19.50 டாலர் பிரீமியம் விலை
இந்த சூழலில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான சவுதி ஆராம்கோ, ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் எண்ணெய் விலையை ஒரு பேரல் மீது 19.50 டாலர் கூடுதல் கட்டணத்தை (Premium) விதித்துள்ளது. இது வழக்கமான பென்ச்மார்க் அளவுகோல் விலையை விட அதிகமாகும்.

எளிமையாகச் சொன்னால், ஒவ்வொரு நாட்டின் எண்ணெய்க்கு ஒரு அடிப்படை விலை இருக்கும். தற்போது சவுதி அரேபியா தனது பென்ச்மார்க் விலை மீது 19.50 டாலர் என்ற ப்ரீமியம் விலையை சேர்த்து இறுதி விலையை நிர்ணயம் செய்துள்ளது. உதாரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் அடிப்படை விலை 80 டாலர் என்றால், இறுதி விலை 99.50 டாலராக உயர்கிறது. இதனால், கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இந்த புதிய விலை உயர்வு ஆசிய சந்தைக்கானது, மேலும் இந்த புதிய விலை மே மாத ஆர்டருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலை
ஏற்கனவே ஈரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை போர் துவங்கிய நாளில் இருந்து சுமார் 50% க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் எரிபொருள் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதனால், சரக்கு போக்குவரத்து செலவு முதல் அன்றாட வாழ்க்கை செலவுகள் வரை பல துறைகளில் தாக்கம் ஏற்படுகிறது. தற்போது ப்ரீமியம் விலை 19.50 டாலர் விலை உயர்த்தப்பட்டு உள்ள காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம் உருவாக்கியுள்ளது.

இந்த அச்சத்திற்கான பதில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பொறுத்து உள்ளது.

இந்தியன் பேஸ்கட் விலை
இந்தியா தனது 80 சதவீத கச்சா எண்ணெய் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் இந்தியா எப்போதும் ஒரே நாட்டை நம்பியிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் உள்ளது. இந்தியா தற்போது வளைகுடா நாடுகள் முதல் ரஷ்யா, அமெரிக்க வரையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

தற்போது சவுதி கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள காரணத்தால் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குவது மூலம் விலையை கட்டுப்படுத்தலாம். இப்படி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையை டிராக் செய்யும் இந்தியன் பேஸ்கட் விலை தற்போது ஏப்ரல் 2ஆம் தேதி நிலவரத்தின் படி 130.93 டாலராக உள்ளது என மத்திய அரசின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலிசிஸ் செல் தெரிவித்துள்ளது.

OPEC+ நடவடிக்கை
கச்சா எண்ணெய் டிமாண்ட்-ஐ பூர்த்தி செய்ய OPEC+ அமைப்பு தொடர்ந்து இரண்டாவது மாதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சந்தையை சீராக்க முயற்சி செய்யப்படுகிறது. ஆனால், ஈரான் போர் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு அமைப்புகள் சேதமடைந்தால், இந்த நிலை நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு
இந்த மாற்றங்கள் இந்தியாவுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா தனது எண்ணெய் தேவையின் 80% க்கும் மேற்பட்டதை இறக்குமதி செய்கிறது. இதனால், Saudi Aramco போன்ற நிறுவனங்கள் விலை உயர்த்தும் போது, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக விலையில் எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர வாய்ப்பு உள்ளது. இது போக்குவரத்து செலவுகளை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் உயர்த்தும். இறுதியில், இது மக்களின் வாழ்க்கைச் செலவையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

2026ல் இந்தியா ஒரு நாளுக்கு சராசரியாக 1 - 1.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் வரலாற்று உச்ச இறக்குமதி அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அரசு தனது கொள்முதல் முறையை மாற்றி சவுதி அல்லாமல் மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கினால் இந்த விலையை கட்டுப்படுத்த முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+