சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியார் பள்ளி கல்வி கட்டணம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன 2 முக்கியமான விஷயம்

Google Oneindia Tamil News

சென்னை: அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை மீறி வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுக்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரையும் நம்பி அரசு வேலைக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் கொடுக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

    ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், நவம்பர் 1ம் தேதி முதல் 1முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்கும் நிலையில் நவம்பர் 1 முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் வழக்கம் போல் இயங்க போகின்றன.

    நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட கூடிய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கல்வி துறை அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.

    அரசனை நம்பி புருஷனை கைவிட்ட காங்கிரஸ்.. பஞ்சாபில் தடுமாற்றம் ஏன்?அரசனை நம்பி புருஷனை கைவிட்ட காங்கிரஸ்.. பஞ்சாபில் தடுமாற்றம் ஏன்?

     பள்ளி கல்வித்துறை

    பள்ளி கல்வித்துறை

    பின்னர் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகள் முழுவதும் தூய்மையாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது பள்ளி கல்வி துறை.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதோ அதே நடைமுறை இதிலும் பின்பற்றப்படும் பள்ளிகள் திறப்பிற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.தொடர்ந்து துறை ரீதியாக நடைபெறும் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

    அரசு வேலை

    அரசு வேலை

    குழந்தைகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அதனை சரியான முறையில் கண்காணிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது . மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். யாரை நம்பியும் அரசு வேலைக்காக பணம் கொடுக்க வேண்டாம். தயவு செய்து இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க முன் வாருங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெற்றோர் புகார் தாருங்கள்

    பெற்றோர் புகார் தாருங்கள்

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளிக்க தைரியமாக முன் வர வேண்டும். மேலும் புகார் அளிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உத்தரவாதம் கொடுக்கிறேன். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். காலாண்டு அரையாண்டு தேர்வு மாணவர்கள் வருகை பதிவு பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும்" இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    மாணவர்கள் வருகை

    மாணவர்கள் வருகை

    9-12 வகுப்புகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு..? தற்போது பள்ளி அளவில் சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது.மாணவர்கள் வருகை அதிகரிக்க உடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களே நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

    English summary
    School Education Minister Anbil Mahesh has appealed to parents to come forward to lodge a complaint against private schools for overcharging fees allowed by the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X