காலையிலேயே கண்ணைக் கட்டுதே.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எங்கெங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றையொட்டி அமைந்துள்ள கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் கடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் கடந்த 29ஆம் தேதி இரவு சுமார் 11 மணி அளவில், கரையைக் கடந்தது.

cyclone fengel holidays villupuram

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில், மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, படிப்படியாக குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தாழ்வு நிலையாகவும் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் பெஞ்சல் புயலால் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் வடமாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்திலும், தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.


மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ள நீர் தேங்கியது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மலை அளவு என கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பியதால் வயல்வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்ததால் நேற்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


கனமழை வெள்ளம் காரணமாகவும் மழை நீர் வடியாததன் காரணமாகவும், அந்த மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதேபோல கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் கடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழைநீர் தேங்கியிருந்த 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+