மாட்டிறைச்சியால் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
சென்னை: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி மூதாட்டி ஒருவர் அரசுப் பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, அரசுப் பேருந்தில் பயணம் செய்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை, அப்பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் மாட்டிறைச்சியை எடுத்துச்சென்றதாக கூறி, நடுவழியில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பின்றி இறக்கி விட்டதாகவும், இதனால் அந்த மூதாட்டி அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்தே சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.''
''மாட்டிறைச்சியை பேருந்து பயணத்தின் போது எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றுகூறியே அந்த மூதாட்டியை நடத்துநர் நடு வழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.''
''பாஜக ஆளும் வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியின் பெயரால் அவலங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவு நிறைந்த மாநிலமான தமிழகத்தில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. இதுபோன்றதொரு அவலம் இனி நிகழ்ந்திடாத வகையில், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ''
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் முஸ்லீம் மாணவி ஒருவரிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும் என்று கூறி ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வேலூர் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் இதற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுவாக வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியை வைத்து சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமாகவே நிகழும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications