சாதி ஓட்டு.. எனக்கு தீட்டுனு சொன்னரே சீமான்! அம்பையில் ஏன் போட்டி? நாடார்+முக்குலதோர் பாலிடிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக விலிருந்து விலகிய இசக்கி சுப்பையா தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த தொகுதியில் களமிறங்குகிறார். 'சாதி ஓட்டு எனக்கு தீட்டு' என பேசிய சீமான் அம்பாசமுத்திரத்தில் ஏன் களம் இறங்குகிறார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கின்றனர்.

Seeman

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்திருக்கும் அடுத்ததாக ஐந்து தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகியவை அந்த தொகுதிகள்.

இதில் பெருந்துறையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஜெயக்குமார், விராலிமலையில் விஜயபாஸ்கர், கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. அரசியல் சூட்டை அதிகரிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு களமிறங்க போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

கரூர், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளை விட்டு விட்டு ஏன் அம்பாசமுத்திரத்தை தேர்ந்தெடுத்தார் சீமான் என்பதற்கான காரணங்களாக சில தகவல்களை தம்பிகள் பகிர்ந்து கொண்டார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வென்றிருந்தவர் தான் இசக்கி சுப்பையா. அதிமுகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். அதனால் அதிமுகவின் கோட்டையாகவே இந்த தொகுதி மாறி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் விஜய் அலை அடித்து துவம்சம் செய்த போதிலும் அதில் கரை கண்டவர் இசக்கி சுப்பையா. இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியான சில தினங்களிலேயே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார். இதனால் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறது. சமுதாய வாக்கு பலம், தனிப்பட்ட செல்வாக்கு, பணபலம் என அனைத்துமே இசக்கி சுப்பையா சற்று முன்னணியில் இருக்கிறார்.

இருந்தபோதும் கரூர் உள்ளிட்ட தொகுதிகளை தவிர்த்து விட்டு ஏன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கு களமிறங்குகிறார் என்பது மிக பெரும் கேள்வி. அம்பாசமுத்திரத்தை பொறுத்தவரை நாடார் சமூக வாக்குகள் அதிகம். மேலும் முக்குலத்தோர் வாக்குகளும் அதிகம். சீமான் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது மனைவி முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இரு சமுதாய வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீமான் அங்கு களம் இறங்குகிறார்.

ஆனால் தேர்தலில் நெருக்கடி மட்டுமே தர முடியும். வெற்றி பெறுவது சிரமம் என்கின்றனர். காரணம் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் அப்படி.. 2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களை வெறும் 7.80% வாக்குகளை மட்டுமே நாம் தமிழர் கட்சி பெற்றது. 2026 தேர்தல் அதிமுக 34 சதவீத வாக்குகளையும் திமுக 29 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. தமிழக வெற்றி கழகம் கூட கிட்டத்தட்ட 15 சதவீத வாக்குகளை தான் பெற்று இருந்தது.

அந்த அளவுக்கு திராவிட கட்சிகளின் கோட்டை அம்பாசமுத்திரம் என்றே சொல்லலாம். ஆனால் நாம் தமிழர் கட்சியை வெறும் ஆறு ஏழு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி வெல்லப் போகும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சி அராஜகம் பணபலம் எனக் கூறிய திமுகவும், அதிமுகவும் தேர்தலில் போட்டியிடாமல் விளங்கிக் கொண்டால், பொது வேட்பாளராக சீமான் களமிறங்குவார் என்கின்றனர்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம். இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட செல்வாக்கு. அதிமுகவின் இரட்டை இலைக்கான தனி செல்வாக்கு. திமுகவின் 29 சதவீத வாக்குகள் என அனைத்தையும் தாண்டி சீமான் வெற்றி பெறுவாரா? என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+