Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் திமுகவின் ‘பி டீம்’ தான்.. என்ன ராஜீவ் காந்தியே இப்படி சொல்லிட்டாரு.. ட்விஸ்ட்!

சீமான் எங்கள் பி டீம் தான் என திமுகவின் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சீமான் திமுகவின் பி டீம் என விமர்சிக்கப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுக மாணவர் அணியின் தலைவர் ராஜீவ் காந்தி, "எடப்பாடி பழனிசாமிக்கு விழும் ஓட்டுகளைப் பிரிக்கிறார். சீமான் எங்கள் பி டீம் தான்." எனத் தெரிவித்துள்ளார்.

வட மாநிலத் தொழிலாளர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், வட மாநிலத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வட மாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் திமுக நிலைப்பாடு குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் ஒன் இந்தியா தமிழுடன் பேசியுள்ளார் ராஜீவ் காந்தி. அது பின்வருமாறு:

திமுகவின் பி டீம்

திமுகவின் பி டீம்

கேள்வி : சீமான், பாஜகவின் பி டீம் என்ற குற்றச்சாட்டை நீங்கள் முன்வைக்கிறீர்கள்.. ஆனால், சீமான் திமுகவின் பி டீம், அதனால் தான் வட மாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யவில்லை என்று விமர்சிக்கப்படுகிறதே..

ராஜீவ் காந்தி : சீமான் திமுகவின் பி டீம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எடப்பாடி பழனிசாமிக்கு விழும் ஓட்டுகளைப் பிரிக்கிறார். சீமான் எங்கள் பி டீம் தான். அதை சீமான் ஏற்பாரா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் 2 விஷயங்கள் பரவின. வட மாநிலத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் சீமான் போன்ற நாலாந்தர பேச்சாளர்கள், அடிக்கணும் உதைக்கணும் என பேசுகின்றனர். சீமான் வட இந்திய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்று பேசுகிறார்.

 தேர்தல் பிரச்சார மேடையில்

தேர்தல் பிரச்சார மேடையில்

பிடிக்காத நபர் மீதெல்லாம் ஒரு அரசு வழக்குப் போட முடியாது. அப்படி நாங்கள் நினைத்தால் விஜயலட்சுமி புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்திருக்கவேண்டும். அப்படிப்பட்ட அரசு இது அல்ல. சீமான் வட இந்திய தொழிலாளர்கள் பற்றி பேசியது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது. அந்தப் பேச்சு எல்லாம் தேர்தல் நடத்தை விதிகளுக்குள் வரும். அதற்கு யாரையும் கைது செய்வது வழக்கம் இல்லை. தேர்தல் மேடையில் சீமான் அவ்வாறு பேசியதால் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்தபிறகு கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும். அதேபோல, அண்ணாமலை செய்த குற்றம் 2 ஆண்டுகளுக்கு கீழான தண்டனையில் வரும் குற்றம். பிணையில் வருகிற குற்றம், வழக்கு விசாரணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லப்போகிறது.

திமுக பங்கு

திமுக பங்கு

கேள்வி : தமிழர் வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை திமுகவும் எழுப்பியது, அதன் தொடர்ச்சியாகத்தான், இங்கு வட மாநிலத்தவர் மேல் வெறுப்பு பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது, வட மாநில தொழிலாளர்களின் அச்சத்திற்கு திமுகவுக்கும் பங்கு உள்ளது என்று குற்றம்சாட்டப்படுகிறதே..

ராஜீவ் காந்தி : திமுக இந்தித் திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கும் வரை, இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்யும் வரை இந்தி தெரியாது போடா என்றுதான் சொல்வோம். இப்படி தீவிரமாக இந்தியை எதிர்த்த நாங்கள், நாங்களேதான் தீக்குளித்துச் செத்தோம். முதன்முதலில் இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து மாண்ட கீழப்பழூர் சின்னச்சாமி தொடங்கி சமீபத்தில் சேலம் தாழையூர் தங்கவேலு தீக்குளித்தது வரை திமுக தொண்டர்கள்.

 ஒருவரையாவது தாக்கியது உண்டா

ஒருவரையாவது தாக்கியது உண்டா

இத்தனை பேர் இந்தி திணிப்புக்கு எதிராகத் தீக்குளித்துச் செத்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் இந்தி மொழி பேசிக்கொண்டு, இங்கு வயிற்றுப் பிழைப்புக்காக வரும் எந்த இந்தியச் சகோதரனையாவது திமுக தாக்கியிருக்கிறதா? தனி மனிதர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அரசு இயந்திரம் இந்தியை திணிக்கும்போது, அதனை எதிர்க்கிறோம். வாழ்நாள் முழுவதும் பாகுபாடு பார்க்கும் ஆரியம் என்ற தத்துவத்தை எதிர்த்தோம், என்றைக்காவது ஒரு திக, திமுக தொண்டர் பார்ப்பனரை அடித்ததாக வரலாறு உண்டா? இது தனிமனித வன்மம் இல்லை. சித்தாந்தச் சண்டை இது.

வெறுப்பு பிரச்சாரமா

வெறுப்பு பிரச்சாரமா

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவரைச் சேர்க்கக்கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தது. வட மாநிலத்தைச் சேர்ந்தவர் இங்கு 7 ஆண்டுகள் வசித்து இருப்பிடச் சான்றிதழ் பெற்று, தமிழ்நாட்டில் வாக்குரிமையும் பெற்றவர் என்றால், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டு அவர் அரசு வேலை பெற தகுதி பெற்றவர் ஆகிறார். நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வரும் வரை இந்தியக் குடிமகன் எந்த மாநிலத்துக்குச் செல்வதையும், அங்கு குடிமகனுக்கான உரிமை பெறுவதையும் தடுக்க முடியாது. ஓபிஎஸ் போன்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பிற மாநிலத்தவர் பங்கேற்கலாம் என திருத்தம் செய்தபோது அதனை எதிர்த்தோம். இது வெறுப்பு பிரச்சாரமா? நாங்கள் உரிமைக்காக போராடுவதை கொச்சைப்படுத்தக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+