மாற்று வீரர்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை? சஞ்சு சாம்சனை புறக்கணிக்கிறதா பிசிசிஐ? ரசிகர்கள் கேள்வி!
சஞ்சு சாம்சனை மீண்டும் பிசிசிஐ புறக்கணிப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் மாற்று வீரர்களுக்கான தேவை எழுந்துள்ள நிலையில், பிசிசிஐ இதுவரை யாரையும் அறிவிக்கப்படவில்லை. இதனால் சஞ்சு சாம்சனை பிசிசிஐ புறக்கணிப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போட்டிகள் வரும் மார்ச் 17ம் தேதி மும்பையில் தொடங்கி, கடைசிப் போட்டி மார்ச் 22ம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடக்க உள்ளதால், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற அவர், முதுகுவலி பிரச்சினை என பயிற்சியாளர்களிடம் கூறியுள்ளார். அவருக்கு ஸ்கேன் எடுத்த போது, பழைய காயமே இன்னும் முழுவதுமாக குணமடையாமல் இருப்பது தெரியவந்தது.

ரோகித் சர்மா விலகல்
அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் மிக முக்கிய இரு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மாற்று வீரர் சஞ்சு சாம்சன்?
மாற்று வீரராக சஞ்சு சாம்சனே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி விளையாடிய போது, அவரும் ஸ்ரேயாஸ் ஐயரும் மட்டுமே பிரதான வீரர்களாக விளையாடி வந்தனர். அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என அனைத்து நிலைகளிலும் சஞ்சு சாம்சனால் ஆட முடியும் என்று ஏற்கனவே நிரூபித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் பேட்டிங் சராசரி
அதேபோல் சஞ்சு சாம்சனின் ஒருநாள் போட்டிக்கான சராசரியாக 71 வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய எந்த வீரருக்கும் 66 சராசரியை வைத்ததில்லை. ஆனால் அசாத்தியமான சராசரியை வைத்துள்ள சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து மூன்று ஒருநாள் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாற்று வீரர்களுக்கான தேவை இருக்கும் போது கூட, சஞ்சு சாம்சனை பிசிசிஐ தேர்வு செய்ய முன் வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications