சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெயின் காரணமே ப.சிதம்பரம் மனைவிதான்.. மதுரையில் கொளுத்தி போட்ட "புள்ளி".. அப்செட்டில் ஸ்டாலின்..!

மதுரையில் திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சித்து பேட்டி தந்துள்ளார் செல்லூர் ராஜு

Google Oneindia Tamil News

சென்னை: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய பேச்சு, முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் அப்செட்டுக்கு உள்ளாக்கி வருகிறதாம்.

தேனி மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.. மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, மே 27-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து ரயில் சேவையினை துவக்கி வைத்தார்..

“திராவிட அரசன் ஸ்டாலின்.. இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஹாட் டாபிக் இதான்” - அன்பில் மகேஷ் பேச்சு“திராவிட அரசன் ஸ்டாலின்.. இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஹாட் டாபிக் இதான்” - அன்பில் மகேஷ் பேச்சு

 ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேனி எம்பி ஓ.பி.ரவிந்திரநாத், அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்... இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை குற்றஞ்சாட்டியும், புகார் சொல்லியும் பேட்டி தந்தார். அவர் சொன்னதாவது:

 கச்சத்தீவு

கச்சத்தீவு

"முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு உள்ளிட்ட கோரிக்கையை வைத்திருக்கிறார்.. இது எப்படி இருக்கு தெரியுமா? தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இருக்கு.. கச்சத்தீவு தாரைவார்ப்பு திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி காலத்தில் தான் கொடுக்கப்பட்டது... இப்போது அவருடைய மகன் வந்து பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கேட்கிறார்.

 ப சிதம்பரம்

ப சிதம்பரம்

அதேமாதிரி நீட் தேர்வு குறித்து முதல்வர் மேடையிலேயே பேசியிருக்கிறார்.. இது அப்பட்டமான விளம்பரம்தான்.. விளம்பரம் தேடுவதற்காகவே இப்படி பேசியுள்ளார்... நீட் தேர்வு மத்தியில் அங்கம் வகித்த திமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் இந்த நீட் தேர்வு கொண்டு வர கோர்ட்டில் வாதாடினார்.. அதன் அடிப்படையில்தான் சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை கொண்டு வர உத்தரவிட்டது..

 நளினி சிதம்பரம்

நளினி சிதம்பரம்

அப்போதுகூட நளினி சிதம்பரம், கோர்ட்டுக்கு வெளியே ஒரு பேட்டி தந்தார்.. அதில், "இனி எந்த காலத்திலும் நீட் தேர்வு தமிழகத்துக்கு வராது" என்றுதான் சொன்னார்.. ஆனால் இன்றைக்கு நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் தனக்கு விளம்பரம் தேடுவதற்காகவே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.. கச்சத்தீவு மற்றும் நீட் தேர்வு பிரச்சனைக்கு காரணம் திமுகதான்.. அவர்கள் ஆதரித்த காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. ப.சிதம்பரம் அவர்களின் மனைவி தான் வழக்காடி நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர்.

 காமெடி திமுக

காமெடி திமுக

மாணவ செல்வங்களின் படிப்பு இப்போது நீட் தேர்வால் பாதிப்படைந்துள்ளது... திமுக ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்துவிட்டது. ஜிஎஸ்டி விவகாரத்தில் வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து வரி வருவாய் பெறுவது எப்போதும் அதிகம், ஒதுக்கீடும் குறைவாக இருக்கிறது. அதில் கூடுதல் வருவாய் வேண்டுமென முன்பே ஆணித்தரமாக சொன்னதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்.. ஆக மொத்தம், தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கு திமுகவும், முதல்வர் ஸ்டாலினும்தான்" என்றார் செல்லூர் ராஜு.

English summary
sellur raju slams dmk government announcements and attack chief minister mk stalin in madurai meeting மதுரையில் திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சித்து பேட்டி தந்துள்ளார் செல்லூர் ராஜு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X