சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.. அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்ப தொடங்கி உள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையில் இருக்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

ஆறு போல காட்சி அளிக்கும் சாலைகள்.. வேகமாக நிரம்பும் ஏரிகள்.. சென்னையில் தொடரும் கனமழை!ஆறு போல காட்சி அளிக்கும் சாலைகள்.. வேகமாக நிரம்பும் ஏரிகள்.. சென்னையில் தொடரும் கனமழை!

சென்னை

சென்னை

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அடையார் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம்

இந்த ஏரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பூண்டியில் இருந்து இங்கு செல்லும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் நீர் சென்றால் அணை வேகமாக நிரம்பும் என்பதால் நீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர் மழையால் தொடர்ந்து ஏரி நிரம்பி வருகிறது. தற்போது 21 அடியை எட்டியுள்ளது.

எப்போது திறக்கும்

எப்போது திறக்கும்

ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி இப்போது திறந்து விடப்படாது. இந்த ஏரி 22 அடியை தொட்டதும் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு திறந்து விடப்படும் தண்ணீர் அடையாறு ஆறுக்கு செல்லும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதனால் அங்கு கரையோரங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அடையாறு ஆறு அருகே இருக்கும் நத்தம், குன்றத்தூர், திருநீர்மலை, வழுதலம்பேடு, திருமுடிவாக்கம், சிறுகானத்தூர், மணப்பாக்கம் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

English summary
Sembarampakkam to get full: People live near by Adyar rivers advice to stay safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X