செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
செங்கோட்டையன், பொன்னையன் பதில்களால் பாஜக தரப்பு கடுப்பாகி உள்ளதாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பும், பாஜக தரப்பில் இணக்கமாக செல்வார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. மற்றொருபுறம், ஓபிஎஸ் விவகாரத்தில், தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்ள எடப்பாடி தயாராக இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.
நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை களமிறக்குகிறது.. ஆனால், தமாகாவுக்கு தொகுதியை ஒதுக்கும்படி, கேட்டுக் கொண்டும் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லையாம்.
பாஜகவை கலந்தாலோசிக்காமல் வேட்பாளரையும் அறிவித்துவிட்டதால், பாஜக கையை பிசைந்து நின்றுள்ளது.. "இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்.. நமக்கு ஓபிஎஸ், தினகரன், சப்போர்ட் இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்கலாம்" என்றும் சீனியர்கள் சொன்னார்களாம்.

ஸ்பீடு அண்ணாமலை
அதையும் மாநில தலைமை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.. எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக மாநில தலைமை தொடர்ந்து செயல்படுவதாக அமித்ஷா வட்டாரத்துக்கு ஓபிஎஸ் தகவல் அனுப்பிவிட்டாராம்.. இதன் விளைவாகவே, அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். தன் தரப்பு விளக்கத்தை அங்கு தந்துவிட்டு, உடனடியாக தமிழகம் திரும்பிய வேகத்திலேயே 2 தரப்பையும் நேற்று காலை சந்தித்து பேசினாராம் அண்ணாமலை.. "அதிமுகவை ஒருங்கிணைக்கவே பாடுபடுகிறோம்" என்று பேட்டிகளை தந்ததும் அதன் விளைவாகத்தான் என்கிறார்கள்..

நோ நோ
எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை & தரப்பு சந்தித்தபோது, பலருக்கும் இந்த சந்திப்பு ஆச்சரியப்படுத்தியது.. ஆனால் அவர்களை சந்தித்து முடித்துவிட்ட கையோடு ஓபிஎஸ்ஸையும் சென்று சந்தித்தது குழப்பத்தை தந்துவிட்டது.. அப்படியானால் பாஜக யாருக்குதான் ஆதரவு தரப்போகிறது? என்ற கேள்வியும் கிளம்பியது.. இரு தரப்பையும் சமாதானப்படுத்தவே, அண்ணாமலை தரப்பு முயன்றதாக கூறப்பட்டு வருகிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுக்கு வெளிப்படையாகவே "நோ" சொல்லும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டாராம்.. ஆனால், "அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்" என்று அண்ணாமலை கூறியிருந்தது அதிமுக வட்டாரத்தை ரொம்பவே சூடாக்கிவிட்டதாம்...

செங்கோட்டையன்
அதனால்தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்று பதிலடி தந்தாராம். எடப்பாடியை பாஜக தலைவர்கள் நேற்றைய தினம் சந்தித்துவிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே, பொன்னையனும் காட்டமான பேட்டி தந்திருந்தார்.. "பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.. ஆனாலும் மத்தியஸ்தம் செய்து, அதிமுகவையே மீட்டெடுக்க பாடுபடுவதுபோலவும், ஒன்றுசேர்ப்பது போலவும், பாஜக தன்னை காட்டிக் கொள்வது, அதிமுகவை கடுப்பாக்கி வருகிறதாம்.

மத்தியஸ்தம்
"நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்... அதனால் பாஜகவினர் எங்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்... முடிந்தால், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா போன்றவர்களை மறுபடியும் பாஜகவில் சேர்க்கமுடியுமா என்று பாருங்கள்.. கேசவ விநாயகனுக்கும் உங்களுக்கும் இருக்கிற பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா என்று பாருங்கள்... கமலாலயத்தில் இருக்கும் அமைச்சர் எல்.முருகனின் வார் ரூமுடன் இருக்கும் மனக்கசப்புகளை மறக்க பாருங்கள். இதையெல்லாம் சரிசெய்துவிட்டு எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண வரலாம் என்று பொருமலும் எழுந்து வருகிறதாம்..!!
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications