விஜய்யிடம் பேசிய சீனியர் பாஜக நிர்வாகி.. கூட்டணிக்கு கொடுத்த மிகப்பெரிய ஆஃபர்
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காய் நகர்த்தி வருகிறது. மறுபக்கம் தமிழக அதிமுக - பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகிறது. திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தயாராகி வருகிறது. விஜய்யிடம் பாஜக சீனியர் நிர்வாகி ஒருவர் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறார்கள். பிரதான கட்சிகள் அனைத்தும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலை பொறுத்தவரை வழக்கம் போல திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி களத்தில் உள்ளன.

இதனுடன் நாம் தமிழர், தவெக கட்சிகளும் தேர்தலில் களம் காண்கிறார்கள். திமுக தங்கள் வலிமையான கூட்டணியுடன் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டுகிறது. ஆனால் அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து விரிசல் நிலவி வருகிறது. பாஜக கூட்டணியில் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக விலகிவிட்டது.
முக்கியமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது அந்த கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேசியளவில் பாஜகவுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுப்பதால், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாஜஜௌடு அரசியலை கண்காணித்து வருகிறார்.
அடிக்க தமிழ்நாடு வருகிறார். டெல்லியில் இருந்தபடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே திமுகவை எதிர்க்கும் அனைவரையும் ஒன்றிணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பாஜக சார்பில் தவெக தரப்பு நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
தவெக நிர்வாகிகளுடன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திலும், பாஜக தரப்பில் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அண்ணாமலை முதல் இந்த சம்பவத்தை பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் குழு வரை தவெகவுக்கு ஆதரவாக தமிழ்நாடுஅரசு மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைமையில் உள்ள ஒரு முக்கிய சீனியர் நிர்வாகி, தவெக தலைவர் விஜய்யிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவம் தவெகவுக்கு தொடர் நெருக்கடிகள் சூழ்ந்து வருகிறது. இதனால் விஜய்யும் மற்ற அரசியல் கட்சியினரிடம் நெருக்கம் காட்டி வருகிறார்கள். இதை உணர்ந்து விஜய்யிடம் பேசிய அந்த பாஜக சீனியர் நிர்வாகி, தவெகவுக்கு பெரிய ஆஃபர் கொடுத்து தூண்டில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications