சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அன்பு" இல்லையே.. உடம்பை கவனிச்சுக்கவே இல்லை".. ஏக்கத்துடன் ஸ்டாலின்.. சோகத்துடன் நினைவுகூறும் திமுக

ஜெ.அன்பழகனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன்.. உடம்பை பார்த்துக்கோன்னு.. கவனிக்கவே இல்லை.. எப்படியாவது என் அன்புவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. என் ரொம்ப நாள் ஃபிரண்ட்" என்று டாக்டர்களிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டே இருந்தார் முக.ஸ்டாலின்... ஆனாலும் அன்பு நண்பனை கொரோனா கொண்டு போய்விட்டது.. எத்தனையோ பேரை வாழ வைத்த புண்ணியவான் ஜெ.அன்பழகனின் நினைவுநாள் இன்று..!

திமுகவின் எம்எல்ஏக்களிலேயே ரொம்பவும் ஃபேமஸ் ஆக இருந்தவர் ஜெ. அன்பழகன்.. கம்பீரமான, பெருத்த உடலமைப்பு கொண்டவர்..

அதிரடி என்றாலே அது அன்புதான் என்று பெயரெடுத்தவர்.. துல்லியமான அறிக்கைகள், துணிச்சலான வாதங்களை தன் வாழ்நாளின் இறுதிவரை புரிந்து கொண்டே இருந்தவர். சட்டசபை கூடுகிறது என்றாலே அன்பழகனின் விவாத குரல் அங்கு ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்.

அந்த கையெழுத்து யாரோடது.. ஜெ. வா? திடீர் விசாரணையை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.. உடையும் மர்மங்கள்!? அந்த கையெழுத்து யாரோடது.. ஜெ. வா? திடீர் விசாரணையை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.. உடையும் மர்மங்கள்!?

உறுதி

உறுதி

ரொம்பவும் வெளிப்படையானவர்.. தன் கருத்தில் உறுதியாக இருப்பார்.. யாருக்காகவும் தன்னை காம்பரமைஸ் செய்து கொள்ளவே மாட்டார்.. ஆனால், இப்படிப்பட்ட மனிதருக்குள் ஏராளமான கருணைகளும், கரிசனங்கள் ஒளிந்து கொண்டிருந்ததை பலர் அறியாமலேயே போய்விட்டனர்.

 திருமணங்கள்

திருமணங்கள்

திமுக தொண்டர்களின் பலர் வீட்டு கல்யாணங்கள் அன்பழகன் செய்த மறைமுகமாக உதவியாலேயே நடந்து முடிந்துள்ளது.. தொண்டர் ஒருவர், தன் வீட்டு கல்யாணம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டாலே போதும், அன்பழகனின் நிதி அந்த வீட்டுக்கு தானாகவே போய் சேர்ந்துவிடும்.. அதேபோல மருத்துவ உதவி என்று வந்துவிட்டால், ஸ்ட்ரைட்டா ஆஸ்பத்திரிக்கே போன் செய்து உரிய சிகிச்சைக்கு கோரிக்கை விடுப்பார்.. தொண்டரின் மொத்த ஆஸ்பத்திரி பில்லையும் கட்டிவிடுவார்.

 கோரிக்கை மனுக்கள்

கோரிக்கை மனுக்கள்

படிப்பு விஷயத்திலும் இப்படித்தான்... சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தள்ளுவண்டி வைத்திருக்கும் தொண்டரின் வீட்டு பிள்ளைகளைகூட, தானே பொறுப்பெடுத்து கான்வென்ட்டில் படிக்க வைத்தவர்தான் அன்பழகன்.. கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிதியுதவிடன் கோரிய மனுக்கள் மட்டுமே, இவரது ஆபீசில் உள்ள டேபிளில் நிறைந்து வழிந்து கொண்டே இருக்குமாம்... ஒரு கோரிக்கை மனு வந்தால் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது கலைஞர் கருணாநிதியிடம் இருந்து கற்று கொண்ட பாடம் என்று பெருமிதத்துடன் சொல்வார்.

சிகிச்சை

சிகிச்சை

அப்படிப்பட்ட அன்பழகனை கொரோனா தாக்கி இறந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.. அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோதெல்லாம், "நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன்.. உடம்பை பார்த்துக்கோன்னு.. கவனிக்கவே இல்லை.. எப்படியாவது என் அன்புவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. என் ரொம்ப நாள் ஃபிரண்ட்" என்று டாக்டர்களிடம் சொல்லி கொண்டே இருந்தார் ஸ்டாலின்.

நினைவுநாள்

நினைவுநாள்

ஏற்கனவே உடம்பில் அவருக்கு பல பிரச்சனைகள் இருந்த நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் தோல்விதான் கிடைத்தது.. அன்பழகன் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.. இதையடுத்து பல்வேறு திமுக தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரது படத்திறப்பு விழாவிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 ராஜா ட்வீட்

ராஜா ட்வீட்

அதேபோல, மன்னார்குடி எம்எல்ஏ பிடிஆர் ராஜாவும் அன்பழகன் நினைவுநாளையொட்டி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "#அன்பு_அண்ணன் நம்மை விட்டுச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது.. அண்ணா உங்களது வீர தீர களப்பணியும் #கலைஞர் மீதும் #தளபதி மீதும் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இளைய தலைமுறைக்கு பாடமாக இன்று திகழ்கின்றது. சமூக வலைதளங்களிலும் நீங்கள் இல்லாத குறை நன்கு தெரிகிறது !!!" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Senior Leader J Anbazhagans memorial day and DMK paid homage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X