மறந்துடாதீங்க..சிக்கலாகும்-ரூ2,000 நோட்டு மாற்றம் உட்பட 5 முக்கிய நிதி விவகாரம்- செப்.30 கடைசி நாள்!
சென்னை: ரூ2,000 நோட்டுகளை மாற்றுவதை உட்பட 5 முக்கியமான நிதி, முதலீடு சார்ந்த விவகாரங்களுக்கு செப்டம்பர் 30-ந் தேதிதான் கடைசி நாள் என்பதை மறக்காதீங்க மக்களே!
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு தொடர்பான பிரதமர் மோடி அறிவித்த போது ரூ2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் ரூ2,000 நோட்டுகள் நடைமுறையில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டது.

ரூ2,000 நோட்டு மாற்றம்: இதனையடுத்து 4 மாதங்களுக்கு முன்னதாக ரூ2,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்துடன் கை வசம் உள்ள ரூ2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் கொடுத்தது ரிசர் வங்கி. உங்கள் கைவசம் ரூ2,000 நோட்டுகள் இருந்தால் இன்னும் 6 நாட்கள்தான்.. அதாவது செப்டமப்ர் 30-க்குள் உடனே வங்கிகளில் மாற்றிவிடுங்கள்.. அதன் பிறகு கையில் இருந்தாலும் அம்மஞ்சல்லி பைசாவுக்கு பிரயோஜனமில்லாமல் போய்விடும்.
எஸ்சிஎஸ்எஸ் ஆதார் இணைப்பு: நடுத்தர வர்த்தகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கமானதுதான். அஞ்சல் அலுவலகங்கள், எஸ்சிஎஸ்எஸ் எனப்படுகிற மூத்த குடிமக்கள் திட்டம் போன்றவற்றில் நீங்கள் இணைந்திருந்தால் அதில் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த சேமிப்பு திட்டங்களில் கட்டாயம் ஆதார் எண்ணை சேர்த்தே ஆக வேண்டும். இதற்கும் காலக்கெடு செப்டம்பர் 30-ந் தேதிதான். அதற்குள் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் உங்கள் சேமிப்பு திட்ட கணக்குகளே காலாவதியாகிப் போய்விடுமாம்
அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்: அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு திட்டங்களில் இணைந்திருப்பவர் நீங்கள் எனில் செப்டம்பர் 30க்குள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்தாக வேண்டும். இல்லையெனில் அந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உங்கள் கணக்கில் ஏறாமல் போய்விடுமாம்.
மியூச்சுவல் ஃபண்ட்: டிசிஎஸ் கட்டணங்களை அக்டோபர் 1 முதல் மத்திய அரசு உயர்த்துகிறது. மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட டிசிஎஸ் கட்டணம் சார்ந்த கணக்குகளிலும் செப்டமப்ர் 30-ந் தேதிக்குள் நாமினி யார் என்பதை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. அப்படி நாமினியை நீங்கள் சேர்க்காவிட்டால் கணக்கு காலாவதியாகுமாம்.
எஸ்பிஐ வீகேர் திட்ட முதலீடு: நாட்டின் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் எஸ்பிஐ வீகேர் திட்டமும் ஒரு காலக்கெடுவை விதித்துள்ளது. மூத்த குடிமக்கள் செப்டம்பர் 30-க்குள் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.50% வட்டி கிடைக்கும். இது தொடர்பான பல்வேறு முதலீட்டு திட்டங்களை ஏற்கனவே எஸ்பிஐ அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications