சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுமிகளுக்கு சீண்டலா.. அரை மணி நேரத்தில் போலீஸ் ஸ்பாட் போகனும்! டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பாலியல் தொடர்பான புகார்கள் வரும்போது காவல்துறையினர் செய்லபாடுகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகின்றன. அதுவும் குழந்தைகளை குறிவைத்து கயவர்கள் பாலியல் தொல்லைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

பள்ளிகளிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடந்து வருகிறது.
சமீப காலங்களில் தமிழக பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்,.

ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருக்காங்க.. ராஜேந்திர பாலாஜி ஸ்பெஷலா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருக்காங்க.. ராஜேந்திர பாலாஜி ஸ்பெஷலா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

பாலியல் தொல்லைகள்

பாலியல் தொல்லைகள்

கடந்த ஜூன் மாதம் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், ஆபாச செயல்களில் ஈடுபட்டும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டான். கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறான்.

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியர் கொடுத்த வருண் சக்கரவத்தி என்பவன் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் கொடுமை என்னும் அரக்கனின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். சமீபத்தில் சென்னையில் கூட ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரை விட்டுள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

இப்படி தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக, மாணவிகளுக்கு எதிராக பாலியல் தொல்லை தொடர்கின்றன. பாலியல் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் தொடர்பான புகார்கள் வரும்போது காவல்துறையினர் எப்படி செயல்பட பேண்டும்? என்பது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

முதலில் இதை செய்ய வேண்டும்

முதலில் இதை செய்ய வேண்டும்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான புகார்கள் வரும்போது புகார்களை பெறும் காவலர்கள் அரைமணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றும் குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தால் ஆலோசகரை நியமித்து சாட்சியாக பயன்படுத்த வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu DGP sylendra babu has given advice on the actions of the police when it comes to sexual harassment complaints. Sex crimes are on the rise in Tamil Nadu. That too is targeting children and the killers are staging sexual harassment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X