• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அக்கா".. ஜாக்கிரதையா இருங்க.. ஷர்மிளா "அப்படி" சொன்னதும்.. சூர்யா போட்ட போஸ்ட்.. ஏன் இப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் செய்துள்ள போஸ்ட் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவிற்கும் - டெய்சி சரணுக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் போனில் சண்டை நடந்து இருக்கிறது. இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சூர்யா சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார்.

24 மணி நேரத்தில்.. அக்கா - தம்பியா? மனம் மாறிய சூர்யா - டெய்சி.. என்ன காரணம்? ஓ இதுதான் நடந்ததா? 24 மணி நேரத்தில்.. அக்கா - தம்பியா? மனம் மாறிய சூர்யா - டெய்சி.. என்ன காரணம்? ஓ இதுதான் நடந்ததா?

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த திருச்சி சூர்யா, இது எங்களுக்கு இடையில் நடந்த தனிப்பட்ட உரையாடல். இதை நாங்கள் லீக் செய்யவில்லை. நாங்கள் இருவருமே வெளியே விடவில்லை. இது தொடர்பாக கேட்கபட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறோம். எங்கள் தரப்பு விளக்கத்தை சொல்லி இருக்கிறோம். வேறு யாரோதான் ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அது யார் என்று கட்சி விசாரிக்கும். கட்சி அவர்களை கண்டுபிடிக்கும். அதே சமயம் நான் பேசியது தவறு . எனவே கட்சி என் மீது நடவடிக்கை. எடுக்கட்டும் எந் விதமான நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்கள் குடும்பம் நட்பான குடும்பம். என் மனைவி கிறிஸ்துவர். என் மனைவியும் டெய்சியும் நெருங்கிய நண்பர்கள்தான், என்று திருச்சி சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.

டெய்சி சரண்

டெய்சி சரண்

அதேபோல் டெய்சி சரண் கொடுத்த விளக்கத்தில், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி இந்த விஷயத்தில் சமாதானம் செய்து கொண்டோம். யார் கண் பட்டதுபோல இந்த நிகழ்வு நடந்துவிட்டது. நாங்கள் அக்கா தம்பி போன்றவர்கள். அவர் என்னை தொடக்கத்தில் அப்படிதான் கூப்பிட்டார். இனியும் அப்படியே பயணிப்போம். நான் அவரை தம்பி போலவே பார்க்கிறேன். எங்களுக்கு கட்சியே முக்கியம். இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்.. கட்சிக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம், என்று டெய்சி சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.

விசிக ஆதரவு

விசிக ஆதரவு

விசிக ஆதரவாளரும், நடிகையுமான டாக்டர் ஷர்மிளா இதை விமர்சனம் செய்துள்ளார். அதில், பெண்களே உஷார்....பாஜககாரன் இனிமேல் அக்கான்னு சொன்னா ஜாக்கிரதையா இருங்க சகோதரினு ஒருத்தன் பிரஸ்மீட் கொடுப்பானே என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாசமலர் 2.0 ... ஆனா இந்த டீலிங் ரொம்ப கேவலமா இருக்கு, என்றும் இவர்களை ஷர்மிளா கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் முன்பு செய்த போஸ்டில், முன்பே இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியும் ... தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காம சூர்யாவோட காசிவரை டூர் போயிட்டு வந்திருக்கார்...

 சூர்யா சீண்டல்

சூர்யா சீண்டல்

இப்போ விஷயம் பொதுவெளிக்கு வந்ததும் வழியில்லாம - இப்போ தான் எனக்கு தெரியும்னு பொய் சொல்லி குழு போட்டு விசாரிப்போம்னு காலம் தாழ்த்துகிறார், என்று விமர்சனம் செய்துள்ளார். .பாஜககாரன் இனிமேல் அக்கான்னு சொன்னா ஜாக்கிரதையா இருங்க என்று ஷர்மிளா சொன்ன போஸ்டுக்கு திருச்சி சூர்யா அக்கா என்று பதில் அளித்துள்ளார். சூர்யா போனில் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அந்த சர்ச்சை அடங்கும் முன்பே இப்படி சமூக வலைத்தளத்தில் விமர்சனம் வைத்த பெண் மருத்துவரை கிண்டலாக அக்கா என்று சொன்னது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

English summary
Sharmila trolls Daisy Saran - Trichy Surya compromise: BJP leader comes up with wrong reply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X