இப்படியே போனால் நிலைமை மோசமாகிடும்.. சர்ரென உயர்ந்த உணவு பொருட்களின் விலை.. நிர்மலாவின் திக் அறிக்கை
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நாளை, ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணத்தை தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வு 2023-24 மதியம் 1 மணிக்கு மக்களவையிலும், 2 மணிக்கு மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும்.
பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பது யார்?: பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்படுகிறது. இது தலைமை பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது.
உணவு பொருட்கள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (சிஎஃப்பிஐ) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
கடந்த இரண்டு ஆண்டுகளில் 97 சதவீத உயர்வை உணவு பொருட்கள் சந்தித்து உள்ளன. .
வெப்ப அலைகள், சீரற்ற பருவமழை விநியோகம், பருவகால மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை,மற்றும் வறண்ட நிலை - காலநிலை மாற்றத்தால் உணவு விலைகள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூலை 2023 இல் தக்காளி விலை அதிகரித்தது, பருவகால மாற்றங்கள், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பயிர் நோய்கள் மற்றும் நாட்டின் வடக்குப் பகுதியில் பருவ மழையின் தாமதம் ஆகியவை தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர முக்கிய காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த அறுவடை காலத்தில் பெய்த மழை, வெங்காயத்தின் தரத்தை பாதித்தது. இது வெங்காயம் விலை உயர முக்கிய காரணம் ஆனது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாத காரணத்தால், பருப்பு வகைகள், குறிப்பாக துவரம் பருப்பு விலை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. இதன் உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
பின்னணி: பொருளாதார ஆய்வு அறிக்கையில் என்ன இருக்கும்? : பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது இந்தியாவில் பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும் , ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது.வழங்கும் .
பொருளாதார ஆய்வு ஆவணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?: பொருளாதார ஆய்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆவணத்தின் முதல் பகுதியில் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இது பொருளாதாரம் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பாய்வையும் வழங்கும். இரண்டாம் பாகம் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம், ஜிடிபி ஆகியவை பற்றிய விவரங்களை கொண்டு இருக்கும்.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications