லோன் வாங்க வங்கிகளில் வந்த சைலன்ட் மாற்றம்! CIBIL ஸ்கோர் இல்லையா? கவலை வேண்டாம்.. ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிக் கடன் சந்தையில் நிறைய பேருக்கு தெரியாத ஒரு முக்கிய மாற்றம் இப்போது சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது.. இத்தனை காலமும் சிபில் ஸ்கோர் இல்லாவிட்டால் கடன் கிடைக்காது என்ற எண்ணம் நிதித்துறையில் பரவலாக இருந்தது.. ஆனால் இந்த பழைய நடைமுறை இப்போது மாற துவங்கிவிட்டது.. லோன் ஹிஸ்டரி இல்லாதவர்களுக்கும் ஒரு புதிய சான்ஸ் வந்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

பழைய முறையில் ஒருவர் கடன் வாங்க போனால், அவருடைய கடந்த காலக் லோன் ஹிட்ஸ்டரி, சிபில் ஸ்கோர் மட்டுமே முதன்மை காரணியாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது முன்னணி வங்கிகளும், NBFC என்று சொல்லக்கூடிய வங்கிசாரா நிதி நிறுவனங்களும் அந்த முறையை மாற்றிக் கொண்டுள்ளன.

No CIBIL Score

CIBIL ஸ்கோர்

கடன் வாங்காத புதிய தலைமுறையினரை குறிவைத்து "நியூ டு கிரெடிட்" (New to Credit) என்ற புதிய முறையை அவை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் ஒருமுறை கூடக் கடன் வாங்காதவர்கள் அல்லது கிரெடிட் கார்டே வைத்திருக்காத சாதாரண மனிதர்களுக்கும் மிக எளிதாக லோன் கிடைக்கும் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது.

இந்த தற்கால புதிய முறையில், சிபில் ஸ்கோர் இல்லாவிட்டாலும் கூட வங்கிகள் மாற்று வழிகளில் ஒருவருடைய நம்பகத்தன்மையை ஆய்வு செய்கின்றன. குறிப்பாக, ஒரு விண்ணப்பதாரரின் மாத வருமானம், அவர் பார்க்கும் வேலையின் ஸ்திரத்தன்மை போன்றவை பார்க்கப்படுகின்றன..

வங்கிகளில் வந்த சத்தமில்லாத மாற்றம்

அதேபோல் அவருடைய வங்கிக் கணக்கில் நடக்கும் மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளின் வரலாறு, அவருடைய அன்றாட டிஜிட்டல் பேமெண்ட் பழக்கவழக்கங்கள் போன்றவையும் பரிசீலிக்கப்படுகின்றன.. அதாவது நீங்கள் டிஜிட்டல் ஆப்களை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் நிதி ஒழுக்கத்தை வங்கிகள் கணித்துவிடுகின்றன. இதனடிப்படையில், சிறிய அளவிலான தனிநபர் கடன்கள், நுகர்வோர் இஎம்ஐ கடன்கள் மற்றும் அவசரக் கால நிதி உதவிகள் எளிதாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இந்த மாற்றங்களினால் பயன்பெற போவது யார் தெரியுமா? முதன்முதலில் வேலைக்கு சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சொந்தமாக புதிய தொழில் தொடங்கிய சிறு வணிகர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸாக இருக்க போகிறது.

பேங்க் லோன் - கிரெடிட் கார்டு

அதுமட்டுமல்ல, கிரெடிட் கார்டு பக்கமே போகாத நடுத்தர மக்களுக்கும், இது ஒரு பெஸ்ட் வழிகாட்டியாக இருக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.. அதைவிட முக்கியமாக, சிபில் ஸ்கோர் இல்லையே, லோன் கிடைக்குமா? கிடைக்காதா என்று பயப்படும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும், புது தெம்பை இந்த மாற்றம் நிச்சயம் தரும் என்கிறார்கள்.

இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் சொல்லும்போது, இந்த நவீன மாற்றமானது எந்தவிதமான நிதித் தடைகளும் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகக் கடன் பெறும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால், அதேசமயம், முறையான வருமானத் திட்டமிடல் இல்லாமலும், திருப்பிச் செலுத்தும் தகுதிக்கு மீறியும் அவசரப்பட்டு இப்படிப்பட்ட கடன்களை வாங்குவது பிற்காலத்தில் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் கொண்டு போய் தள்ளிவிடக்கூடும்" என்று அலர்ட் செய்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், இந்தியக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை, மக்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என்றாலும், அதனை எவ்வளவு பொறுப்புடன் கையாள்கிறோம் என்பதில்தான் ஒவ்வொருவரின் நிதி எதிர்காலமும் அடங்கியுள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+