சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி தகுதி நீக்கம் செய்ய முடியாது.. ஆக்சனிலிருந்து எஸ்கேப் ஆன கு.க.செல்வம்.. திமுகவிற்கு பலத்த அடி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் இவர் தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிப்பார்.

டெல்லியில் பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசி, ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தார். அதோடு வெளியே வந்து பேட்டி கொடுத்த கு.க. செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் கறுப்பர் கூட்டம் குறித்தும் பேச வேண்டும், திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்று குற்றச்சாட்டு வைத்தார்.

பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு வந்து கு.க. செல்வம் இப்படி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவில் கு.க. செல்வம் இணைய போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஸ்டாலினுக்கு ஸ்டாலினுக்கு "ஒர்க் அவுட்" ஆகுதோ.. பெரும்பான்மை கிடைக்குமாம்.. அழுத்தமாக டிக் அடித்த வாசகர்கள்!

என்ன நினைத்தார்

என்ன நினைத்தார்

ஆனால் நான் பாஜகவில் இணையவில்லை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி வேண்டும், என்று பாஜக தலைவர்களை சந்தித்தேன் என்று குறிப்பிட்டார். கு.க. செல்வம் இப்படி கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திமுகவில் எம்எல்ஏவாக இருக்கும் கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும். ஒரு கட்சியில் எம்எல்ஏவாக இருக்கும் போதே அவர் வேறு கட்சி மாறினால், அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்.

பாஜகவில் சேரவில்லை

பாஜகவில் சேரவில்லை

இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்காக பாஜகவில் இணையாமல் கு.க. செல்வம் காத்து இருந்தார். திமுகவே நம்மை கட்சியில் இருந்து நீக்கும் என்று கு.க. செல்வம் காத்து இருந்தார். பொதுவாக ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்டால், அவரை அந்த கட்சியால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதாவது எம்எல்ஏ பதவியை பறிக்க முடியாது. இந்திய சட்ட பிரிவு 10 அல்லது தகுதி நீக்க சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் கட்சியின் தலைவர் அல்லது கொறடா மூலம் அந்த எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய முடியாது.

ஏன் நீக்க முடியாது

ஏன் நீக்க முடியாது

ஐந்து வருடம் முடியும் வரை அந்த எம்எல்ஏ தனித்து சட்ட சபையில் செயல்படுவார். நீக்கப்பட்ட கட்சியின் உறுப்பினராக அவர் கருதப்பட மாட்டார். இந்த நிலையில் இங்குதான் திமுகவிற்கு கு.க. செல்வம் செக் வைத்தார் என்று கூற வேண்டும். கு.க. செல்வம் தானாக பாஜகவில் இணையவில்லை. திமுக தன்னை நீக்கும் வரை அவர் காத்து இருந்தார். இப்போது கு.க. செல்வம் மற்ற கட்சியில் இணையும் முன் திமுக அவரை நிரந்தரமாக நீக்கிவிட்டது.

தப்பித்த கு.க. செல்வம்

தப்பித்த கு.க. செல்வம்

இதனால் திமுக இனி கு.க. செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இனி கு.க. செல்வம் சட்டசபையில் தனித்து செயல்படுவார். அடுத்த வருடம் தேர்தல் வரும் வரை கு.க. செல்வம் தனது எம்எல்ஏ பதவியை இழக்க மாட்டார். அந்த வகையில் கு.க. செல்வம் மிகவும் திட்டமிட்டு, அரசியல் தந்திரத்தோடு செயல்பட்டு தனது எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டு உள்ளார். திமுகவிற்கு இது பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

English summary
No anti-defection law, Since Ku Ka Selvam, expelled from the party, DMK can't disqualify him anymore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X