அன்று ஸ்டாலின் விடுத்த அழைப்பு! மறக்காமல் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்!
சென்னை: சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்று சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;
''சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் மாண்புமிகு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்களை எனது இல்லத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இன் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள எங்களின் இந்தச் சந்திப்பு கல்வி - பண்பாடு - தொழில் எனப் பல்வேறு தளங்களில் வளர்ந்து, நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரண்டு நாட்கள் நடைபெறும் "அயலகத் தமிழர் தினம் 2024" விழாவை இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அயலகத் தமிழர் தின விழாவின் இரண்டாவது நாளான நாளை (12.1.2024) முதலமைச்சர் ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, 'எனது கிராமம்' என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications